இங்கிலாந்து இதற்காக வெட்கப்பட வேண்டும்: சொல்கிறார் சங்கக்காரா (வீடியோ இணைப்பு)

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சங்கக்காரா, இது குறித்து கூறுகையில், கெவின் பீட்டர்சன் மிகச் சிறந்த வீரர்.

இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட குளறுபடியால், அவரால் சில வருடங்களாக அணிக்கு திரும்ப முடியவில்லை. கவுண்டி போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

அவர் அணிக்கு வரும்பட்சத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அவர் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.