சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை வயதானவர் என்று, மறைமுகமாக குறிப்பிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை குற்றம்சாட்டியுள்ளார், ரஜினிகாந்த் ஆதரவாளரும், காங்கிரசின் முன்னாள் பிரமுகருமான கராத்தே தியாகராஜன். குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுக்க போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், வன்முறையில் யாரும் ஈடுபட கூடாது என அட்வைஸ் செய்திருந்தார். இருப்பினும் குடியுரிமை சட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்தது, அரசுக்கு ஆதரவான போக்கு என சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் அது வைரலானது. பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் அவரை ஆதரித்து ட்வீட் வெளியிட்டனர்.