கணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி சென்னை: சென்னை அண்ணாசாலையில் மாநகர பேருந்து மோதி பெண் பலியான விபத்து தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் எழிலரசி. நேற்று இவர் தனது கணவர் சூரியநாராயணனுடன் பைக்கில் அண்ணா சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அங்கேயுள்ள சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தம் பைக் சென்றபோது, திடீரென, எழிலரசி கணவர், சற்று வலதுபுறமாக பைக்கை ஓட்ட ஆரம்பித்தார். பின்னால் இருந்து அரசு பஸ் ஒன்று சென்றதை அவர் கவனிக்கவில்லை. பைக்கில் பயணம் பைக்கில்

cctv-footage-of-a-woman-killed-in-a-bus-crash-in-chennai-2-1576916739

பயணம் E18 வழித்தடத்தில் பயணிக்கும், அரசு மாநகர பேருந்தில், எழிலரசி பயணித்த பைக் இடித்தது. இதனால் பைக் தடுமாறி விழுந்தது. இதனால், எழிலரசியும், அவரது கணவனும் பைக்குடன் விழுந்தனர். அப்போது, எழிலரசி மீது பஸ் டயர்கள் ஏறி இறங்கின. இந்த கோர விபத்தில், எழிலரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதியம் மதியம் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சூரியநாராயணன் தலைக்கவசம் அணிந்திருந்ததாலும், அவர் மீது பஸ் டயர் ஏறாததாலும், கீழே விழுந்தும் கூட அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் விசாரணை போலீஸ் விசாரணை சம்பவத்தன்று திண்டிவனத்தை சேர்ந்த ஓட்டுனர் வெங்கடேசன் (40) பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த எழிலரசி உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வலது பக்கம் போகாமல் இருந்திருந்தால் வலது பக்கம் போகாமல் இருந்திருந்தால் இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், அரசு பஸ் அதன் வழித்தடத்தில் சென்று கொண்டு இருந்தது நன்கு தெரிகிறது. எழிலரசியின் கணவர் திடீரென வலதுபக்கமாக பைக்கை கொண்டு சென்றது விபத்துக்கு காரணம் என்பதை இந்த வீடியோ வைத்து பார்த்தால் தெரிகிறது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கிறார்கள்.