bris_3rd_day_010

 

 

 

 

 

 

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மிட்செல் ஜான்சன் விஸ்வரூபம் எடுக்க இந்திய வீரர்கள் அவரை செய்து தூண்டிவிட்டதே காரணம் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

3வது நாள் ஆட்டமான இன்று சுமித்துடன் ஜோடி சேர்ந்த மிட்செல் ஜான்சன் இந்திய பந்து வீச்சை நொறுக்கி தள்ளினார்.

ஆக்ரோஷமான இந்திய பந்து வீச்சுக்கு இடையே ஜான்சன் களமிறங்க அவர் இறங்கியவுடனேயே இந்திய பீல்டர்களின் ஸ்லெட்ஜிங் தொடங்கி விட்டது.

குறிப்பாக விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இசாந்த் சர்மா தனது பார்வை, செய்கை மூலமாகவும் ஜான்சனின் கவனத்தை சிதறடிக்க முயன்றனர். ஆனால் இந்திய அணிக்கு எதிராக அது முடிந்து விட்டது.

இது குறித்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் சுமித் கூறுகையில், மிட்செலும் ரோஹித் சர்மாவும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கேலிப் பேச்சில் ஈடுபட்டனர்.

சிலபல கேலி வார்த்தைகளும் ஜான்சன் காதில் கேட்கும்படியாகப் பேசப்பட்டது. இந்திய அணியினர் அவர் மீது ஆக்ரோஷம் காட்டினர். ஏகப்பட்ட பவுன்சர்களை வீசினர். ஆனால் ஜான்சன் இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்தார்.

நேர்மையாகக் கூறவேண்டுமெனில் ஜான்சனின் துடுப்பாட்டத்திற்கு முன்னால் இந்திய பவுலர்களுக்கு விடை இல்லாமல் போனது என்று கூறியுள்ளார்.