சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி அதிமுக-வை உடைக்க முயற்சிப்பதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டுக்கு சென்ற சசிகலா அங்கிருந்தவர்களுடன் மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக குடும்ப உறுப்பினர்களை சந்தித்துவிட்டு வந்தேன், அவர்கள் மன உறுதியுடன் உள்ளனர்.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அதிமுக-வை பிளவுபடுத்தும் செயல்.

இதேவேளை ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆவேசமாக கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்று திடீரென தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வீட்டிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

sasikala

 

 

 

 

 

 

 

 

 

 

முன்னதாக காபந்து முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நிமிசத்திற்கும் நிமிசம் ஆதரவு பெருகிவருகிறது.

இதற்கிடையில், வேண்டுமென்றே இந்த இழுத்தடிப்பை செய்து அதிமுக-வை பிரிக்கப்பார்க்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. இவற்றை முறியடிப்போம். நாளை என்ன வேண்டுமானாலும். நடக்கலாம். பொறுத்திருந்திருந்து பாருங்கள் என்றும் சசிகலா தெரிவித்திருப்பதால், மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதேவேளை தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, சென்னையில் 12 இடங்களில் போலீசார் வாகன அணி வகுப்பு நடத்தவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் சசிகலாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு திங்கள் அல்லது செவ்வாய் வெளிவரும் என்கிறார்கள். அது அவருக்கு பாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் தீர்ப்பு வருவதற்கு முன்னர் ஏதோ தமிழகத்தில் நடைபெறப்போகின்றது என்கிறார்கள்.

அது கலவரமா? அல்லது ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் உண்ணாவிரதமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் சசிகலாவின் பேட்டியை அடுத்து, நாளை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கலவரம் வெடிக்கலாம் என்று ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பேசிவருகின்றனர்.

இன்னொரு தரப்பினரோ நாளை சசிகலா அம்மா சமாதிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறுகின்றார்கள்.

எப்படியாயினும் சசிகலா சொன்னது போல நாளை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாளை சென்னையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்?