ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்… பிராண்ட் என்ன தெரியுமா?

1987- டிசம்பர் மாதம் 24 ம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் மறைந்ததாக செய்தி வந்தது.அதன் பின்னர் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆரை அடக்கம் செய்யும்போது அவரின் கையில் கட்டியிருந்த ரேடோ கடிகாரத்தை கழற்ற முயன்றனர். மக்கள் அப்படியே இருக்கட்டும் என்று போட்ட கூச்சலால் அவரின் கையில் ஒரு மோதிரமும், கட்டியிருந்த வாட்சும், இருக்க, கண்ணாடி தொப்பியுடன் சந்தன பேழையில் அடக்கம் செய்யப்பட்டார்.

அங்கு நினைவிடம் எழுப்பிய பிறகு, மக்கள் இன்னும் கடிகாரம் ஓடும் சத்தம் கேட்கிறது என்று சமாதியில் காத்து வைத்து கேட்பது வழக்கமாகிவிட்டது.

அது போலவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையில் கட்டியிருந்த வைரகற்கள் பதித்த வாட்சு, வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வாட்ச், கிரீன் எம்ரால்டு மோதிரம், தங்க வளையல், காதில் வைர கம்மல் என்று எதுவும் கழட்டப்படாமல் அவரது உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா எப்போதுமே ஃப்ராங் முல்லர், கேலட் போன்ற பல லட்சம் விலை உயர்ந்த அந்த வாட்சை தான் வாங்குவாராம் .ja-boch