தமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள திரைப்பட நடிகைகள்

தமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள திரைப்பட நடிகைகள்

திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் ஒரு திரையுலகில் பிரபலமான பின்னரே அந்த புகழினை கொண்டு பிறமொழிகளான (தெலுங்கு, மலையாளம், கன்னடம்) என வெவ்வேறு திரையுலகில் நடிக்க தொடங்குகின்றனர். இவர்களுக்கு திரைப்படங்களில் பின்னணி பாடகர் சிலர் குரல் அளித்து வருகிறார்கள். அப்படி மொழியே தெரியாமல் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகைகள் மத்தியில், தமிழகத்தை பிறப்பிடமாய் கொண்டு தமிழ் திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது 2018 முதல் 2019 ஆண்டில் முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நடிகைகள் சிலர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.

1. சாய் பல்லவி

கலை

Actress

பிரபலமான படங்கள்

என்.ஜி.கே, தியா, மாரி 2 தனது சிறுவயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ள இவர் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இவர் மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து தமிழில் பிரபலமான பின்னரே தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். 

2. பிரியா பவானி ஷங்கர்

கலை

Actress

பிரபலமான படங்கள்

மான்ஸ்டர், கடை குட்டி சிங்கம், மேயாத மான் செய்தி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், நாடக தொடரில் நடித்து பிரபலமானார், பின் சில திரைப்படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கி பிரபலமாகியுள்ளார்.

3. சமந்தா

கலை

Actress

பிரபலமான படங்கள்

சூப்பர் டீலக்ஸ், ஓ. பேபி, இரும்பு திரை தமிழகத்தில் பிறந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் மூலம் திரையுலகில் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளிவந்த நீதானே பொன் வசந்தம், கத்தி போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ளார்.

4. கீர்த்தி சுரேஷ்

கலை

Actress

பிரபலமான படங்கள்

சண்டகோழி 2, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம் திரையுலக பின்னணி கொண்டு திரையுலகிற்குள் அறிமுகமாகினும், இவரின் முதல் படமான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

5. ஐஸ்வர்யா ராஜேஷ்

கலை

Actress

பிரபலமான படங்கள்

விளம்பரம், நம்ம வீட்டுப் பிள்ளை, மெய் நிகழ்ச்சி தொகுப்பாளர், துணை கதாபாத்திரம் போன்று வேடங்களில் நடித்து  திரைப்படங்களில் அறிமுகமாகி திரைப்பட நாயகியாக பிரபலமானவர்.

6. திரிஷா கிருஷ்ணன்

கலை

Actress

பிரபலமான படங்கள்

பேட்ட, 96, மோகினி தமிழில் முன்னணி நடிகையாக இருந்த இவர், சில காரணங்களால் திரையுலகில் இருந்து விடைபெற்ற இவர் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

7. பிரியா ஆனந்த்

கலை

Actress

பிரபலமான படங்கள்

LKG, ஆதித்ய வர்மா, முத்துராமலிங்கம் சிறு பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழகத்தில் பிறந்து பிற மாநிலங்களில் வளர்ந்துள்ள இவர், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

8. ரெஜினா கேஸ்சன்றா

கலை

Actor/Actress

பிரபலமான படங்கள்

7 – செவேன், குருக்ஷேத்திரம், நெஞ்சம் மறப்பதில்லை தமிழகத்தில் பிறந்து தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், தற்போது தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார்.

9. மேகா ஆகாஷ்

கலை

Actress

பிரபலமான படங்கள்

வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட, எனை நோக்கி பாயும் தோட்டா 2018-ஆம் ஆண்டு தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், 2019-ஆம் ஆண்டு 5 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

10. நிவேதா பெத்துராஜ்

கலை

Actress

பிரபலமான படங்கள்

சங்கத்தமிழன், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், தமிழில் ஒரு சில முக்கிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.