நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை
நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது பரப்புரை பர்மிங்காம் பகுதியில் 25/01/2019மூன்று மணியளவில் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் திரு யோகி முன்னாள் அமைச்சர் ராஜலிங்கம் மற்றும் புதிய வேட்பளார்கள் திரு பார்த்தீபன் மற்றும் கிருஷாந்த் கலந்து கொண்டனர்
திரு யோகி அவர்கள் பேசுகையில்   தான் எடுத்துவரும் நடவடிக்கையை பற்றி எடுத்துரைத்தார் மற்றும் இலங்கை ராணுவ தளபதி பிரியங்கா பெர்னாண்டோ எப்படி பிரிட்டன் நீதிமன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்கமளித்தார் தொடர்ந்து திரு ராஜலிங்கம் அவர்கள் பேசும்போது இனிவரும் காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரங்கத்தில்   ஊழல் மோசடிகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகும் உறுதிமொழி வழங்கினார்  முன்னாள்  மேலும் இம்முறை புதிதாக களமிறங்கியிருக்கும் இளையோர்களை வரவேற்றப்பதாகவும் அவர்களுக்கு தான் நல்ல வழிகாட்டியகா இருப்பேன் என்று தெரிவித்தார் தொடர்ந்து புதிய வேட்பளரான திரு பார்த்தீபன் அவர்கள் உரையாற்றும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு பிரபாகரன் அவர்களின் சிந்தனையினை ஏற்று தனித் தமிழீழம் அமைவத்திட்கு  செயல்படுவேன் என்றும் பிரித்தானியா சட்டத்திற்கு உட்பட்டு சன நாயக ரீதிஜில் போரடுவேன் என்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அபிலாசைகள் தமிழ் ஈழம் வாழ் மக்களின்    உரிமைகளுக்ககா   செஜல்படுவேன் என்றும் தொடர்ந்து பிரிட்டன் பாரளுமன்ற உறுப்பிணர்களுடன் தொடர் சந்திப்புகள் திடடமிட்டுள்ளதாகவும் அவர்கள் முலம் பிரித்தானியா அரசுக்கு கடும்   அழுத்தங்களை  ஏட்படுத்தி இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதட்கும் தமிழர்களுக்கு ஓரே தீர்வு தமிழீழமே என்று வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார் தொடர்ந்து புதிய வேட்பாளரான கிருஷாந்த் அவர்கள் பேசுகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திட்கும் புலம்பெயர் மக்களுக்கும் உள்ள இடை வெளியினை தான் அவதானித்ததாகவும் அதனால் மக்களிடம் நேரடியாக சென்று விளக்கமளித்து நல்லுறவை வளர்ப்பது தன்னுடைய முதல் வேலையாக அமையும் என்றும் தொடர் போராட்டங்கள் முன் எடுக்கப்படும் என்றும் தமீழீழம் அமைவதட்கான  வேலைத்திட்டம் முழு மூச்சாக முன்னெடுக்கப்படும் என்று திரு கிருஷாந்த் அவர்கள் தெளிவுபடுத்தினார் நன்றி எமது புலனாய்வு செய்தியாளர்