இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியுள்ளமையை அடுத்த மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் பட்டாசு வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்கள் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்று மாலை இலங்கை ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

மைத்திரி அனைத்து மக்களையும் ஒன்றினைத்து நல்ல ஆட்சியினை செய்வர் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது

தமிழ் மக்களின் விடிவிற்கு இந்த நாட்டிலே நீண்ட காலம் ஆட்சி செய்த குடும்ப ஆட்சியை பூண்டோடு அழிப்பதற்காகவே அனைத்து மக்களும் ஒன்று திரண்டு எதிரணி வேட்பாளரை ஆதரித்தார்கள் என மக்கள் கருத்துரைக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் இந்த நாட்டிலே ஆட்சிபீடம் ஏறுபவர் தமிழ்பேசும் மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை செய்யப்போகின்றார் என்பதனை அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும், இவர் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து நல்ல ஆட்சியினை செய்வர் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது எனவும் மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மலையகத்தில் வெற்றிக் கொண்டாட்டம்

மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டத் தொடர்ந்து மக்கள் நாடளாவிய ரீதியில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், பொகவந்தலாவ, புஸ்ஸலாவ ஆகிய பகுதிகளில் மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெற்றி கொண்டாட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆதரவாளா்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வெடி கொளுத்தி மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், மைத்திரியின் ஆதரவாளர்கள் பாற்சோறு உண்டும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.