நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சினால் முன்னெடுத்து நடத்தப்படுகின்ற “UK REFER SRI LANKA TO ICC” campaign இற்கு
30.12.2018
இன்று லண்டன் வெம்பிலி மத்திய பகுதியில் காலை 10.00 மணியில் இருந்து 4.00 மணி வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக இலங்கை சிங்கள பேரினவாதத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையான 100000 கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
ஏராளமான தமிழ் மக்கள் வாழும் இப்பகுதியில் பிரித்தானியா வாழ் மக்கள் பலரும் தமது ஒத்துழைப்பை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் முன் மொழியவேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடத்த வைப்பதே எமது நோக்கம் என்பதை தெளிவாக விளக்கி பதாதைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

அத்துடன் பிரித்தானிய வாழ் தமிழர்களாகிய நாம் அனைவரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குபாரப்படுத்தி அங்கு விசாரணை செய்வதன் மூலம் எமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற எமது விருப்பத்தை ஒட்டு மொத்தமாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கின்றோம். என்பதை செயற்பாட்டாளர்களின் முன்மாதிரியான இச்செயற்பாடு வலியுறுத்தி இருந்தது.