அஜித் மட்டும் தான் அப்படி கூறினார்- மேடையிலேயெ கண்ணீர் விட்ட சிம்பு

அஜித் மட்டும் தான் அப்படி கூறினார்- மேடையிலேயெ கண்ணீர் விட்ட சிம்பு

அஜித் மட்டும் தான் அப்படி கூறினார்- மேடையிலேயெ கண்ணீர் விட்ட சிம்பு - tamilmother
சிம்பு நடிப்பில் வாலு திரைப்படம் ஒரு வழியாக அவருடைய தந்தையே வாங்கி வெளியிடவுள்ளார். இதனால், இனி படம் கண்டிப்பாக சொன்ன தேதிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு மிகவும் மனமுடைந்து பல கருத்துக்களை கூறினார்.
இதில் இவர் பேசுகையில் ‘இந்த 2 வருடமாக என் படங்கள் வரவில்லை, என்னிடம் உள்ள எல்லாம் என்னை விட்டு போனது, ஒரு பெண்ணை காதலித்தேன் அவளும் என்னை விட்டு சென்றாள்.
நான் மிகவும் மனமுடைந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தே நேரத்தில் தான், என் அப்பாவிடம் போன் செய்து அஜித் “கவலைப்படாதீங்க சார் உங்கள் மகன் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவான்” என கூறினார், நான் இங்கு இருக்க ஒரே காரணம் என் ரசிகர்கள் மட்டும் தான்’ என மிகவும் சோகத்துடன் கண்களில் கண்ணீருடம் பேசினார்

Leave your vote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings