அடுத்தடுத்து தேசிய விருதுகளை குவிக்க.. நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் வாய்ப்பு.. எப்படி தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்களுக்கு இந்த முறை தேசிய விருதுகள் குவிந்துள்ளன. இதே போல அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் தேசிய விருது விழாவில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினி தரவரிசை தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் தல அஜித் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் தல அஜித் குமாரின் சிறந்த திரைப்படங்கள் மக்களிடம் தொற்றுநோய் பரவல் திரைக்கதையில் பிரபலமான தென்னிந்திய படங்கள் தமிழில் த்ரிஷாவை ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள் தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்களின் பட்டியல் மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் நடிகர் விஜய் குரலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 15 பாடல்கள் தல அஜித்குமார்
படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் தல அஜித் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் தல அஜித் குமாரின் சிறந்த திரைப்படங்கள் மக்களிடம் தொற்றுநோய் பரவல் திரைக்கதையில் பிரபலமான தென்னிந்திய படங்கள் தமிழில் த்ரிஷாவை ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள் தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்களின் பட்டியல் மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் நடிகர் விஜய் குரலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 15 பாடல்கள் தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் PrevNext சூரரைப் போற்று மட்டுமல்ல மேலும், ஒரு படத்திலும் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்க எப்படி வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்ப்போம். 67வது தேசிய விருதுகள் 2019ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அறிவிக்காத நிலையில், நேற்று அறிவிக்கப்பட்டன. அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார். சிறந்த தமிழ் படமாக அசுரன் தேர்வானது. விஜய்சேதுபதிக்கு தேசிய விருது சூப்பர் டீலக்ஸில் திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்டிய விஜய்சேதுபதிக்கு சிறப்பு துணை நடிகருக்கான விருது
விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் பாடலுக்காக இமான், ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபன் மற்றும் கருப்பு துரை படத்தில் நடித்த சிறுவன் நாக விஷால் உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் தேசிய விருதுகளை தட்டித் தூக்கினர். அடுத்த ஆண்டு 2020ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப் பட வாய்ப்புள்ளது. அல்லது உடனடியாக 2020ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பும் விரைவிலேயே அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒன்றாகவே விருது விழா நிகழ்ச்சியை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுக்கு தேசிய விருது 2020ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டால், கோல்டன் குளோப், ஆஸ்கர் போட்டிகளுக்கு வரை சென்ற நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு தேசிய விருதுகளை சூர்யா வெல்லவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்கிற விஷயம் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இன்னொரு வாய்ப்பு சூரரைப் போற்று படத்துக்கு மட்டுமின்றி, இயக்குநர் வெற்றிமாறன் உடன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்துக்காகவும் தேசிய விருதை தட்டிச் செல்லும் வாய்ப்பு நடிகர் சூர்யாவுக்கு நிறையவே இருக்கிறது. ஆஸ்கர் விருது போட்டியில் சூர்யாவின் சூரரைப் போற்று கடைசி வரை போராடிய நிலையில், தேசிய அளவில் சூர்யாவுக்கு சீக்கிரமே அங்கீகாரம் கிடைக்கப் போகிறது. கை நழுவிய விருது இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் தேசிய விருதை நடிகர் சியான் விக்ரம் தட்டிச் சென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருது கூட சூர்யாவுக்கு கிடைக்கவில்லை. நந்தா, கஜினி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவுக்கு மாநில அரசின் விருதுகள் கிடைத்துள்ளன. கூடிய சீக்கிரமே நடிகர் சூர்யாவுக்கு ஏகப்பட்ட தேசிய விருதுகள் குவிய வாழ்த்துக்கள்!