மகாகவி பாரதி, இவரை நாமும் நமது இந்தியாவும் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. டிசம்பர் 11ம் திகதி (1882ம் ஆண்டு பிறந்த), இவரது 131வது பிறந்தநாளை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரை பற்றிய சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர் ஆவார்.
கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் பாரதியார் என்றால் அது மிகையாகாது.
இவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அறிந்த இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரதியின் படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி
சுயசரிதை
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை
விடுதலைப்போராட்டத்தில் பாரதியி்ன் பங்கு
இவர் தான் கற்று அறிந்த தமிழ் மொழியையும் கவிதை திறனையும் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.
“வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குவதும் என்போம்”
என்ற இவரது வரிகள் அநேக இளைஞர்களை விடுதலைப்போராட்டத்திற்கு தூண்டியது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்ட அநேகர் சுதந்திர போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றால் மிகையாகாது.
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” – என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்பிக்கையுடன் பாடிய இவரது வரிகள் அக்காலக்கட்டத்தில் மக்களிடையே புத்துணுர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் துரதிஸ்ட வசமாக விடுதலைக்கு முன்பே செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு மறைந்தார்.
மகாகவி பாரதி வாழ்ந்த வீடு
பாரதியின் குடும்ப உறுப்பினர்கள்

PPIகள் மூலம் ₹2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணத்தை NPCI பரிந்துரைக்கிறது
ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐக்கள்)-வாலட்கள் அல்லது கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று