TamilMother

tamilmother.com_logo

{இறாலின் மகத்துவங்கள்}

அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.
முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை.
மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது.
அப்படி ஒரு வகை உணவு தான் இறால்.
நம் விரல் அளவுக்கு கூட இல்லாத, இந்த சிறிய உயிரினத்தில் அப்படி என்ன பயன்கள் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

எடை குறைப்பு

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.
ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள்

சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
எந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.
ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.
இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது.
இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.
அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.

கண் பார்வை சிதைவு

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும்.
மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.

தலை முடி உதிர்தல்

இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும்.
ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

எலும்பு ஆரோக்கியம்

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.
உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும்.
இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்

இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும்.
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

உணவு அலர்ஜி

கடல் உணவுகளினால், இறால் உட்பட அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். புது வகை மீன் அல்லது இறாலை உண்ணும் போது கவனமாக இருங்கள்.
அதே போல் அதிக அளவில் உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல விதமான அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும்.

March28-c_d.jpg

பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் கூறியதையடுத்து, மத்திய அரசை கார்கே கடுமையாக சாடியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசை கடுமையாக சாடினார், கட்சியின் முன்னாள் தலைவரை “அச்சுறுத்தும், பயமுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும்” அரசாங்கத்தின் அணுகுமுறையை

மேலும் படிக்க »
374664213_0-15.jpg

PPIகள் மூலம் ₹2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணத்தை NPCI பரிந்துரைக்கிறது

ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐக்கள்)-வாலட்கள் அல்லது கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று

மேலும் படிக்க »
1680016129_photo.jpg

முதன்முதலில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை முடிவு செய்யும் போது ChatGPT ஐப் பயன்படுத்துகிறது | சண்டிகர் செய்திகள்

சண்டிகர்: முதல் முறையாக, தி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உதவியை நாடினார் ChatGPT, AI சாட்போட்ஒரு ஜாமீன் வழக்கை தீர்மானிக்கும் போது, ​​அதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி அதை அணுகினார்

மேலும் படிக்க »
99054448.jpg

நடிகர் விக்ரமன் நாயர் காலமானார்

பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் மார்ச் 27 திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78. செய்திகளின்படி, விக்ரமன் நாயர் முதுமை தொடர்பான நோயால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது

மேலும் படிக்க »
128888848_gettyimages-1240021558.jpg

Gary Lineker £4.9m வரி பில் மேல் முறையீட்டை வென்றார்

“எனது முடிவுகளின் விளைவு என்னவென்றால், BBC மற்றும் Mr Lineker மற்றும் BT Sport மற்றும் Mr Lineker இடையே நேரடி ஒப்பந்தங்கள் இருந்ததால், இடைத்தரகர்கள் சட்டம் (IR35) சட்டத்தின்படி பொருந்தாது மற்றும் பொருந்தாது”

மேலும் படிக்க »
Rahul-Gandhi-latest-PTI_d_d.jpg

‘எனது உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாமல்’ வெளியேற்ற அறிவிப்புக்கு கட்டுப்படுவேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யுமாறு லோக்சபா செயலகத்தின் நோட்டீசுக்கு பதிலளித்தார், மேலும் அவரது கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியபோதும், வெளியேற்ற நோட்டீஸுக்குக் கட்டுப்படுவேன்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top