You are currently viewing உடன் வெளியேறுங்கள் – பிரான்சும் ஜேர்மனியும் கூட்டாக அறிவிப்பு

உடன் வெளியேறுங்கள் – பிரான்சும் ஜேர்மனியும் கூட்டாக அறிவிப்பு

எத்தியோப்பியாவில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ்சும் ஜேர்மனியும் அறிவுறுத்தியுள்ளன.

ரீக்றே பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் எத்தியோப்பிய அரச படையினருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்த அறிவுறுத்தலை குறித்த நாடுகள் வழங்கியுள்ளன.

தமது நாட்டுப் படையினரை தாமே வழிநடத்தப் போவதாகவும் எத்தியோப்பியாவை பாதுகாப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் பிரதமர் அபி அஹமட் கூறியுள்ளார்.

எந்தவொரு தாமதமும் இன்றி எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கிடைக்கும் முதலாவது விமானத்திலேயே எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறுமாறு ஜேர்மனியும் தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எத்தியோப்பியாவில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply