You are currently viewing “உறவு”.. நயன்தாரா வாயில் சர்க்கரைதான் போடணும்.. “ஆபாசம்”.. அன்னிக்கே ராதாரவியை வச்சு செஞ்சிருக்காரே

“உறவு”.. நயன்தாரா வாயில் சர்க்கரைதான் போடணும்.. “ஆபாசம்”.. அன்னிக்கே ராதாரவியை வச்சு செஞ்சிருக்காரே

“உறவு”.. நயன்தாரா வாயில் சர்க்கரைதான் போடணும்.. “ஆபாசம்”.. அன்னிக்கே ராதாரவியை வச்சு செஞ்சிருக்காரே

சென்னை: நயன்தாரா வாயில் சர்க்கரைதான் போடணும்.. அந்த அளவுக்கு நடிகர் ராதாரவியை பற்றி பொருத்தமான வரிகளை அன்றே கூறியுள்ளார்… அந்த வரிகள் கொஞ்சமும் பிசகாமல் இப்போதும் ராதாரவிக்கு பொருந்தி உள்ளதே ஆச்சரியமான உண்மை..! அன்று ஒரு மேடையில் பேசும்போது, “நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். இப்போவெல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் பேடலாம்… ஏன்னா பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம்… பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம் என்று நடிகர் ராதாரவி பேசியிருந்தார். இதுவரை நடிகைகளில் அதிகமாக விமர்சனங்களை ஏற்று கொண்டவர் நயன்தாராதான்.. அவைகளை எளிதாக கடந்து வந்தவரும் நயன்தாராதான்.. ஆனால், ராதாரவி விஷயத்தை மட்டும் அவர் அப்படி இயல்பாக எடுத்து கொள்ளவில்லை.. இன்னும் சொல்லப்போனால் நயன்தாராராவில் அந்த குற்றச்சாட்டை ஜீரணிக்கவே முடியவில்லை. அதற்கு காரணம் ஒரே துறையை சேர்ந்தவர்.. சீனியர்.. அதனால்தான் உடனடியாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். ஆண் பெருமை அதில், “ராதாரவி மற்றும் அவரை போன்ற பெண் வெறுப்பாளர்களும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்… பெண்களை தாழ்த்தி பேசுவதன் வழியாகவும், அவர்களை ஆபாச பொருளாக விவரிப்பதன் மூலமாகவும் இம்மாதிரியானவர்கள் ‘ஆண் பெருமை’ உணர்வை பெறுகின்றனர்.இதுபோன்ற ‘ஆணாதிக்க பெருமை’ கொண்டவர்களின் குடும்பங்களில் வாழும் பெண்களுக்கு எனது பச்சாதாபத்தைத் தெரிவித்து கொள்கிறேன். அறிக்கை ராதாரவி மாதிரியான ஆட்கள் தொழிலில் வீழ்ச்சியைச் சந்தித்த பிறகு இதுபோன்ற மலிவான உத்திகளை கையாண்டு வெளிச்சம் பெற முயல்கிறார்கள்… ராதாரவியின் இதுபோன்ற நடத்தைகளை எனது அன்புக்குரிய ரசிகர்களும் நல்ல எண்ணம் கொண்ட பொதுமக்களும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நயன்தாரா நயன்தாராவின் இந்த அறிக்கை ஒரு சுருக்கம்தான்.. ஆனால், எவ்வளவு பொருத்தமான வரிகள்? எதையும் மறுப்பதற்கில்லை.. ஆனால், இன்று வரை ராதாரவி தன் பேச்சையும் அணுகுமுறையையும் மாற்றி கொள்ளாமல் இருக்கிறார்.. அதே ஆபாச பேச்சை கடைப்பிடித்து வருகிறார்.. அதுவும் வெட்டவெளியில் பேசி வருகிறார்… மறுபடியும் நயன்தாராவையே வம்பிழுத்து வருவது அதைவிட உச்சக்கட்டமாக இருக்கிறது. பத்திரிகை உதயநிதியை தாக்குவதாகவும், அவருக்கு டேமேஜ் செய்வதாகவும் நினைத்து, நயன்தாராவையும், உதயநிதியையும் இணைத்து வழக்கம்போல ஆபாசத்தை இழைய விட்டுள்ளார்.. “ஒன்னுமில்லே.. நயன்தாரானு ஒரு நடிகை இருக்கு இல்ல.. நான் அதை பத்தி அன்னைக்கு பேசவே இல்லை.. ஆனால், பத்திரிகையில் போட்டு பெரிசாக்கிட்டாங்க.. சரி.. நான்தான் பேசுனேன்… ஆமா பேசினேன், வெச்சுக்கடா, போடான்னு சொல்லிட்டேன்… திமுக உடனே திமுகவுல துடிக்கிகிறானுங்க.. ஆ.. பெண்களை பத்தி இழிவாக பேசினார் ராதாரவின்னு.. கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்குறோம்ன்னு.. உடனே நான் சொன்னேன், தற்காலிகமாக ஏன், நான் பெர்மனண்ட்டாக வெளியே வந்துடறேன்ன்னு சொல்லிவிட்டு நானாதான் வெளியே வந்தேன்… இதை எதுக்கு நான் சொல்றேனா, நயன்தாரா யார்ரா உங்க கட்சி கொள்கை பரப்பு செயலாளரா சொல்லு… என்ன உறவு உனக்கு? சரி உதயநிதிக்கும் அதுக்கும் உறவுனா நான் என்ன செய்றது? அன்னைக்கு அப்படி குதிச்சீங்களே.. இப்போது ஆ ராசா பேசியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க?” என்றார். ஆ.ராசா ஆ.ராசா பேசியதற்காக ராதாரவி இப்படி பேசுகிறாரா? அல்லது உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை தூக்கி காட்டுவதால் இப்படி கோபத்தில் பேசுகிறாரா? அல்லது வழக்கம்போல் கைதட்டல்களை பெற வேண்டும் என்பதற்காகவே எதையாவது வாய்க்கு வந்தபடி பேசுகிறாரா என்று தெரியவில்லை.. எனினும் ராதாரவியின் பேச்சுக்கள் எல்லை மீறி கொண்டிருக்கின்றன.. தன்னை வைத்து கொண்டே ஆபாசமாக பேசிய ராதாரவியை வானதி சீனிவாசனும் அன்று கண்டிக்கவில்லை.. தரமில்லாத வார்த்தைகளை உதிர்த்து வருவதை பார்த்தும், பாஜக இதுவரை கண்டிக்கவில்லை..! நட்பு ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர் ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர்… கர்மவீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும் சரி, எம்ஜிஆரும் கலைஞரும் சரி, எதிரெதிர் துருவங்களாக இருந்திருந்தாலும் அவர்களுக்குள்ளான நட்பும் மரியாதையும் இறுதிவரை குறையவில்லை.. கருணாநிதி அதேபோல, கலைஞரும், ஜெயலலிதாவும், கண்ணியத்தையும் வார்த்தை வரம்புகளையும் இறுதிவரை கடைபிடித்தனர்.. இத்தகைய அரசியல் நாகரீகம்தான் 2 திராவிட கட்சிகளின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரமாக இருந்தது.. இதனால்தான் இவர்களது அறிக்கைகள் கூட வெகுஜன மக்களை எளிதாக சென்றடைந்து சிந்திக்கவும் வைக்க செய்தது.

Leave a Reply