என்னாது வனிதாவுக்கு அஞ்சாவது புருஷனா.. வைரலாகும் போட்டோ.. கலகலவென சிரித்த நடிகர்!
சென்னை: வனிதாவுக்கு ஐந்தாவது புருஷனா… தெய்வமகள் சீரியல் நடிகருடன் ஜோடி போட்ட படி போஸ் கொடுத்த வனிதாவை வைத்து மீம்ஸ் போட்டு கலக்கி க் கொண்டுள்ளனர். வைரலாகி வரும் செய்திக்கு வனிதா உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் சொல்லியுள்ளார் அந்த நடிகர்.
வனிதா திரைப்படங்களில் நடித்து பிரபலமான அதை விடவும் தற்போது விஜய் டிவியில் பலர் ஷோக்களில் தற்போது பிரபலமாகி வருகிறார் . வனிதாவும் காதல்களும் அதுவும் இல்லாமல் அவர் பற்றி பல செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலேயும் அவரது காதலை யாராலும் மறக்க முடியாது அந்த அளவுக்கு ரொம்பவே பிரபலமாகிவிட்டார் .அதுவும் தற்போது இவர் புது படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருக்கும் நிலையில் மீண்டும் அவரை பற்றி வதந்திகள் பரவி வந்து கொண்டிருக்கிறது. காதல் கல்யாணத்துக்கும் இவருக்கும் எப்போதுமே பெரிய பொருத்தம் இருப்பது போலத்தான் இருந்துகொண்டிருக்கிறது. காதல் முறிவு அதனால்தான் அவருக்கு அடிக்கடி காதல் வந்து கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் ஏற்கனவே இவருக்கு நான்கு திருமணம் முடிந்து விவாகரத்து முடிந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் 5வது திருமணத்திற்கு ரெடியாகி விட்டார் என செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஐந்தாவது கணவர் இவர்தான் என தெய்வமகள் சீரியல் நடிகரின் போட்டோவும் பரவிவருகிறது. நடிகர் அரவிந்த் அதனைப் பார்த்து பதறிப்போன தெய்வமகள் சீரியலில் பிரகாஷின் இரண்டாவது அண்ணனாக நடித்த அரவிந்த் இன்ஸ்டாகிராமில் அவரும் வனிதாவும் சேர்ந்து எடுத்த போட்டோவை போட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார். சினிமாக்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றி கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதியது அல்ல ஆனாலும் வனிதாவை பற்றி அதிகமாகவே கிசுகிசுக்கள் உருவாகிவரும் ஆனால் அனைத்துமே சப்பென்று ஆகி விடும்.
மீம்ஸ் அந்த மாதிரி தான் தற்போது வனிதாவும் அரவிந்தும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் .இதனை பார்த்த அரவிந்த் ஒரு போட்டோ சேர்ந்து எடுத்தது ஒரு குத்தமா எதுக்காக இப்படி மீம்ஸ் போட்டு கலாய்க்கிறீங்க என இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் .என்னதான் நெட்டிசன்கள் வனிதாவை வகைவகையாக கலாய்த்து எடுத்தாலும் அசராத அவர் தினமும் தனது வேலையில் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார். இவரா அவரு அரவிந்து தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் பட்டு என்கிற கேரக்டரில் வீட்டோட மாப்பிள்ளையாக நடித்துவருகிறார் .அதனால் அவரை வனிதாவின் கணவர் என எப்படி நினைத்தீர்கள் .அவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என அரவிந்தின் ரசிகர்கள் கூறி வந்தாலும் என்ன பண்றது ஒரு போட்டோ எடுத்தது குத்தம்மா இப்படியெல்லாம் பங்கம் பண்ணுறீங்களே என அரவிந்தும் கமெண்ட் போட்டு வருகிறார் . சுத்தமான
இதயம்ய்யா! .அதற்கு சில ரசிகர்கள் போட்டோ எடுத்தது குற்றம் கிடையாது அது யாரு கூட எடுத்தது எடுக்கிறது என வரைமுறை இருக்கிறது என கூறி வருகின்றனர் .ஆனால் அதற்கு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது வனிதாவின் இதயம் தூய்மையானது அவர் பழகுவதற்கு பண்பானவன் நல்ல குணம் கொண்டவர் என அவரைப் புகழ்ந்து கமெண்டுகளை போட்டு கொண்டிருக்கிறார். இன்னும் கலாய்ப்பார்களா சும்மாவே இவர்களை இருவரையும் வைத்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் மேலும் இந்த மாதிரி வனிதாவை பற்றி கமெண்டுகளை போட்டு இருப்பதை பார்த்தால் சும்மா விடுவார்களா அவர்களும் பதிலுக்கு அப்போ இது கன்ஃபார்ம் தானா என சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். என்னமோ போடா மாதவா என்று ஒரு படத்தில் ஜனகராஜ் புலம்புவார்.. அந்தக் கதையாகத்தான் இருக்கிறது.