காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்

காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்

துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினர், சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகின்றனர்.
நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகளில் சத்துக்கள் மட்டுமல்ல, பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது.

கத்திரிக்காய்

அரிய மருத்துவ குணங்கள் கொண்ட கத்தரிக்காயை பலருக்கும் பிடிப்பதில்லை, பல வண்ணங்கள் இருந்தாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்று தான்.
இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாயு, பித்தம், கபம் போகும்.
அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

vegetables_002

 
 
 
 
 
 
 
 
அவரைக்காய்
அவரைக்காய் சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
vegetables_003
 
 
 
 
 
 
 
 

வெண்டைக்காய்

வெண்டைக்காய் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஞாபகசக்தி தான், மூளை வளர்ச்சிக்கு சிறந்தது.
இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன, சூட்டை தணிக்கும், உஷ்ண இருமலை குணமாக்கும்.
உடம்பில் வாயு உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்பதில் கவனம் தேவை.

புடலங்காய்

நீர்ச்சத்து மிகுந்த காய்களில் இதுவும் ஒன்று, சூட்டுடம்புக்கு ஏற்றது.
இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தை போக்கும், வயிற்று பொருமல், வயிற்று பூச்சி இவற்றை போக்கும்.

வாழைத்தண்டு

வாழையை பொறுத்தவரை அடி முதல் நுனி வரை பலன்தரக்கூடியது, இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பித்தத்தை தணிக்க கூடியது, சூடு ஏற்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்றாலும், சிறுநீரை பெருக்கும்.
இதை உண்டால் குடலில் சிக்கிய முடி, தோல், நஞ்சு ஆகியவை நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உண்ணுவது நல்லது.

Leave a Reply