சாமானியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தொடர்ச்சியாக குறையும் தங்கம் விலை..!
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மீண்டும் தொடர் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, நேற்று காலை நேர வர்த்தக அமர்வில் ஏற்றத்தினைக் கண்ட நிலையில், பிற்பாதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், இன்னும் செல்லிங் பிரஷரிலேயே காணப்படுகிறது. நிபுணர்கள் சொன்னதைப்போல, கடந்த வெள்ளிக்கிழமையன்று எல்லா முக்கிய சப்போர்ட் லெவலையும் உடைத்துக் காட்டியது. எனினும் அதற்கு பிறகு இன்று வரையில் மீண்டும் அந்த சப்போர்ட் லெவலை தாண்டி செல்லவில்லை. அதோடு கேண்டில் பேட்டர்ன்களும் இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்குவதை தவிர்க்கலாம். தங்கம் விலை சரிவினைக் காணும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டும். ஆக தங்கம் விலையானது செல்லிங் பிரஷரில் இருப்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். ஏனெனில் அடுத்த 3 – 4
மாதங்களில் தங்கம் விலையானது மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று என்ன பார்க்கபோகிறோம்? இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம். காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2.20 டாலர்கள் குறைந்து, 1713.60
டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இன்று தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று அதிகரித்து தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம் தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.45% குறைந்து, 26.267 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம் இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 147 ரூபாய் குறைந்து 44,801 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையில் தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.. எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம் இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின்
எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு ( மே காண்டிராக்ட்) 480 ரூபாய் குறைந்து, 67,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. தங்கம் ஆபரண விலை சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 4,238 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 33,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. இன்றோடு மூன்று தினங்களாகவே சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 936 ரூபாய் குறைந்து காணப்படுகிறது. தூய தங்கம் விலை இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து 4,623 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 36,984 ரூபாயாகவும் விற்பனை, செய்யப்பட்டு வருகிறது. இது இன்றோடு மூன்று தினங்களாகவே 1024 ரூபாயாக குறைந்து காணப்படுகிறது. ஆபரண வெள்ளி விலை இன்று கிராம் வெள்ளியின் விலையானது 1.20 ரூபாய் குறைந்து, 71.60 ரூபாபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 1200 ரூபாய் குறைந்து 71,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை நேற்று கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், இன்று 1200 ரூபாய் குறைந்து காணப்படுகிறது. தங்கம் & வெள்ளி விலை சரிவு
தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்துடன் ஒப்பிடும்போது 11,500 மேல் சரிவில் தான் காணப்படுகீறது. இதே நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 5,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. லும், இதே வெள்ளியின் விலையானது 10,000 ரூபாய்க்கு மேலும் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணம் கருதி வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. தேவை அதிகரிக்கலாம் தங்கத்தின் தேவையானது இனி வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக பல திருமணம் மற்றும் சுப காரிய நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. ஆக இந்த நிகழ்வுகள் இந்த ஆண்டில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தங்கம் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர லாபம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் 10 வருட பத்திர லாபம், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ச்சியாக வலுவடைந்து காணப்படுகிறது. ஆக இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைக்க வழிவகுக்கிறது. இதனால் தங்கம் விலையானத் சரிவினைக் கண்டு வருகின்றது. தங்கத்தின் லெவல்கள் தங்கத்தின் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. இதன் முக்கிய சப்போர்ட் லெவல் இந்திய சந்தையில் 44,700 – 44,500 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 45,155 – 45,380 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். டாலரில் 1700 – 1692 டாலர்களாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்களாக 1732 – 1750 டாலர்களாகவும் மதிப்பிட்டுள்ளனர். இதே வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் சப்போர்ட் லெவல்கள் 68,800 – 69,500 ரூபாயாகும். இதே சப்போர்ட் லெவல் 67,300 – 66,600 ரூபாய் என்றும் கணித்துள்ளனர். தங்கம் விலை குறையலாம் உலகளவில்
கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பத்திர சந்தையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் பணவீக்கம் பற்றிய கவலையும் எழுந்துள்ளது. எனினும் தங்கத்தின் விலை சற்று சரியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்? தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது.

கரண் ஜோஹர் அனன்யா பாண்டேயை கால் மீ பே மூலம் இணைத்து, ‘அவள் உன்னை ஆச்சரியப்படுத்துவாள்’
கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸில் உள்ள அனைவருக்கும் அனன்யா பாண்டே மீது கரனின் தந்தை வழிபாடு தெரியும். அவரது பெரிய டிக்கெட் படமான, விஜய் தேவரகொண்டாவுடன் தர்மாஸ் லிகர் வெடிகுண்டு வீசியபோது, கரண் அதை