TamilMother

tamilmother.com_logo

சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்


மோட்டார் வாகன சாலை விபத்துகளை தடுப்பதும், அவசர சிகிச்சைகளை பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி,  எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விழிப்புணர்வு அளித்தார். அவர் கூறியதாவது: விபத்து என்பது யாரும் எதிர்பாராமல்  நடக்கும் ஒரு நிகழ்வு, விபத்துக்களை பலவிதமாக பிரிக்கலாம். சாலை விபத்து, நில நடுக்கம், தீ விபத்து, வெள்ள விபத்து, மின்சார விபத்து என்று  கூறலாம்.
மேற்கூறிய விபத்துகளில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்து. நம் இந்திய நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர் இறக்கிறார்கள்.  தேசிய குற்றவியல் துறையின் கணக்கின்படி வருடத்திற்கு 135000 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், இக்கணக்கெடுப்பின்படி 25 வயதுக்கு  உட்பட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதுவும் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படும் விபத்தின் சராசரி விகிதம் அதிகமாக உள்ளது.  விபத்தில் 44 சதவிகிதம் இறப்பு இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களாகவும், 34 சதவிகிதம் இறப்பு சாலையில் நடந்து செல்பவர்களாகும்.
விபத்திற்கான காரணங்கள்
குடிப்பழக்கம், கவனக்குறைவு, கைபேசியை உபயோகித்து கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது,  அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, தலை கவசம் அணியாதது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, உறக்கமின்மை, அசதி, சீட் பெல்ட்  அணியாமல் வாகனத்தை இயக்குவது, போட்டி போட்டு கொண்டு வாகனங்களை இயக்குவது.
சாலை விபத்தை தவிர்க்கும் முறைகள்: 
குடி மற்றும் போதையில் இல்லாத போது வாகனங்களை இயக்குவது, வாகனங்களை ஓட்டும் போது முழு  கவனம் சாலையில் இருக்க வேண்டும். கைபேசியே உபயோகிக்காமல் வாகனத்தை ஓட்டுவது, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை  ஓட்டுவதற்கு ஊக்குவிக்காமல் இருப்பது, 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது. சாலை  விதிகளை முறைப்படி கடைபிடிப்பது, தலை கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது.

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி:

அடிபட்டவரால் பேச முடிகிறதா, பெயர் என்ன? சீராக சுவாசிக்கிறாரா என்றும் நாடி துடிப்பையும் அறிய வேண்டும். உடனடியாக அவசர ஊர்தியை  வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவரிடம் நடந்தவற்றை கூற வேண்டும். சுவாசம் இல்லை என்றால்  அடிபட்டவரின் வாயை திறந்து சுவாசிப்பதற்கு ஏதாவது இடைஞ்சல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். ஏதாவது இடைஞ்சல் இருந்தால், வாயினுள்  ஆள்காட்டி விரலையோ அல்லது நடுவிரலையோ உள் செலுத்தி இடைஞ்சலை சரிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது, அடிபட்டவர் விரலை கடிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாடித் துடிப்பு குறைந்து, சுவாசம்  குறைந்து காணப்பட்டால் வாய்க்கு வாய் சுவாசமும், வாய்க்கு, மூக்கு சுவாசம் கொடுக்க வேண்டும். வாயில் ரத்த கசிவு அல்லது வாந்தி எடுத்தால்  அவருடைய உடம்பையும், தலையையும் ஒரு புறமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இதனால் புறை போவதை தவிர்க்கலாம். ஒரு புறமாக  படுக்க வைக்கும் பொழுது கீழ் இருக்கும் கை நீட்டியும், மேல் உள்ள கை அவருடைய மார்பின் மேல் இருக்க வேண்டும்.
இரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் அந்த பாகத்தை அழுத்தி பிடிக்க வேண்டும். நம்முடைய உள்ளங்கையை வைத்தோ அல்லது கைவிரல்களை  வைத்தோ அழுத்தி பிடிக்க வேண்டும். அடிபட்டவர் விழுந்திருக்கும் போது அவருடைய உடம்பின் நிலை மாறுபட்டு காணப்பட்டால் அவரை அசைக்க  கூடாது. உடனடியாக மருத்துவரின் சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டும். இவ்வாறு இருக்கும் போது குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது.  ஏனென்றால் புறை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும்.
நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை. நோயாளியை ஸ்ட்ரெட்சர் கொண்டு அவரை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவருடைய முதுகையும், கழுத்தையும் நேரடியாக வைக்க வேண்டும். நோயாளி நேராக படுத்திருக்க  வேண்டும். கை அல்லது கால ல் ரத்த கசிவு இருந்தால், அப்பாகத்தை உயர்த்தி பிடித்து ரத்த கசிவை அழுத்தி பிடிக்க வேண்டும். அவர் தொடர்ந்து  மூச்சு விடுகிறாரா? அவருடைய நாடி துடிப்பும் சீராக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். – See more at: http://www.arivomaayiram.com/2014/02/Prevent-motor-vehicle-accidents.html#sthash.wfxD25y1.dpuf

1679567476_photo.jpg

சூர்யகுமார் யாதவ் விடாப்பிடியாக இருக்க வேண்டும், கே.எல்.ராகுலுக்கு இன்னும் பொருந்தவில்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியின் உலகக் கோப்பை தயாரிப்புகளைப் பொருத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை.சூர்யகுமார் யாதவின்

மேலும் படிக்க »
பிரத்யேக இஷ்வாக் சிங் ராக்கெட் பாய்ஸ் 2 வெற்றி விக்ரம் சாராபாய் மறக்க முடியாத பாராட்டு புதிய திட்டங்கள் ஜிம் சர்ப்

பிரத்யேக இஷ்வாக் சிங் ராக்கெட் பாய்ஸ் 2 வெற்றி விக்ரம் சாராபாய் மறக்க முடியாத பாராட்டு புதிய திட்டங்கள் ஜிம் சர்ப்

ஓட்ட் ஆகாஷ் குமார் | புதுப்பிக்கப்பட்டது: வியாழன், மார்ச் 23, 2023, 15:50 (IST)

மேலும் படிக்க »
Accident-rep_d.jpg

மகாராஷ்டிரா: சந்திராபூரில் நடந்த சாலை விபத்தில் மருத்துவர் தம்பதி உயிரிழந்தனர்

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் டிரக் மீது கார் மோதியதில் ஒரு ஆண் மற்றும் அவரது மனைவி, இரு மருத்துவர்களும் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். புதன்கிழமை பிற்பகல் வாரோரா-வானி சாலையில் ஷெபல்

மேலும் படிக்க »
1679566748_photo.jpg

டாடா குழுமம் 2 பில்லியன் டாலர்களை சூப்பர் ஆப் முயற்சியில் செலுத்த திட்டமிட்டுள்ளது

மும்பை: டாடா குழுமம் அதன் சூப்பர் ஆப் முயற்சியில் மேலும் 2 பில்லியன் டாலர் புதிய மூலதனத்தை புகுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது, ஏனெனில் சால்ட்-டு-சாஃப்ட்வேர் குழுமம் தனது டிஜிட்டல் வணிகத்தை மேம்படுத்த முயல்கிறது

மேலும் படிக்க »
WindRiverTheNextChaptergetsnewcastadditions.jpg

அடுத்த அத்தியாயம் புதிய நடிகர்களைச் சேர்க்கிறது- சினிமா எக்ஸ்பிரஸ்

ஜேசன் கிளார்க், ஸ்காட் ஈஸ்ட்வுட் மற்றும் சாஸ்கே ஸ்பென்சர் ஆகியோர் விசாரணை த்ரில்லரின் வரவிருக்கும் தொடரில் இணைந்திருப்பதாக நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். காற்று ஆறு தலைப்பு காற்று ஆறு: அடுத்த அத்தியாயம். கில் பர்மிங்காம்,

மேலும் படிக்க »

3வது ஒருநாள் போட்டியில் கழுகு, நாய் குறுக்கீடு செய்த பிறகு சேப்பாக்கத்தில் ரசிகர்களை வரவேற்கும் வினோதமான காட்சிகள்: பாருங்கள்

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களின் இடைவிடாத அழுத்தத்தின் கீழ் டீம் இந்தியா பேட்டிங் யூனிட் மீண்டும் திணறியது, பார்வையாளர்கள் வெற்றி பெற்றனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என, புதனன்று 21 ரன்கள்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top