பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசெபத்தின் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அறிவிக்கப்படவுள்ளார்.
பிரித்தானிய மன்னராக சார்லஸை முறைப்படி அறிவிப்பதற்கான குழு, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
இக்குழு சார்லஸை பிரித்தானியாவின் மன்னராக முறைப்படி அறிவிக்கவுள்ளது.
பிரித்தானிய மகா ராணியாக கடந்த 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி முடிசூடிக்கொண்ட இரண்டாம் எலிசபெத், கடந்த 70 ஆண்டுகளாக ராணியாக இருந்தவர்.
உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்கொட்லாந்தில் உள்ள அரண்மனையில் நேற்றுமுன்தினம் காலமானார்.
மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், பிரித்தானியாவின் மன்னராகிறார்.
மன்னராவதற்கான இரண்டு நடைமுறை
சில மணிநேரத்தில் மகுடம் சூடும் சார்லஸ்! லண்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு – நேரலையாக…
இந்நிலையில், அவர் முறைப்படி மன்னராவதற்கான இரண்டு நடைமுறைகளில் முதல் நடைமுறை இன்று நடைபெற இருக்கிறது.
இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இதையடுத்து, இரண்டாவது நடைமுறையாக சார்லஸ் மன்னராக உறுதிமொழி வாசித்து பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.