சென்னையில் பெட்ரோலுக்கும் தவிக்கும் வாகன ஓட்டிகள்

சென்னையில் பெட்ரோலுக்கும் தவிக்கும் வாகன ஓட்டிகள்

சென்னையில் பெய்த கனமழையால் பெட்ரோலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 90% பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  சில பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே திறந்து இருக்கின்றன.
அங்கு நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போட்டுச் செல்கின்றனர். பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நிற்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் கையில் பாட்டில்களை எடுத்துக் கொண்டு பல கிலோமீட்டர் நடந்து சென்று, பெட்ரோல் பங்குகளை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசல் ஏதேனும் ஒன்று மட்டுமே கையிருப்பு உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் வாங்க மக்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் கூட்டத்தை பார்த்து பெட்ரோல், டீசல் கிடைக்குமா, கிடைக்காத என்ற சந்தேகத்தில் மக்கள் திரும்பிச் செல்கின்றனர். கையில் பாட்டில்களுடனும், வாகனங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை பால், மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

Leave a Reply