சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை! மக்கள் அதிர்ச்சி! – வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை! மக்கள் அதிர்ச்சி! – வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சற்று இயல்பு நிலை திரும்பிய சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
சென்னையில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் தாம்பரம், பிற புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை காணமுடிகிறது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

 

புறநகரில் மீண்டும் கனமழை… பீதியில் மக்கள் (2ம் இணைப்பு)
சென்னைக்கு மழை ஆபத்து இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த சில மணிநேரங்களிலேயே கனமழை கொட்டத் தொடங்கியுள்ளது. காலை முதல் வானம் தெளிவாக தென்பட்ட நிலையில் லேசாக வெயிலடித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கனமழை கொட்டத் தொடங்கியுள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புபணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 40 மணிநேரம் விடாமல் கொட்டிய கனமழைக்கு நகரத்திலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து, இருப்பிடங்கள் இன்றி தவித்து வருகின்றனர். ஏராளமானோர் உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவமும் வந்துள்ளது. உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் இன்று பிற்பகல் 2 மணிவரை மழை சற்றே ஓய்ந்திருந்தது. இதனால் சென்னைவாசிகளும், புறநகரில் வசிப்பவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சென்னையில் இன்று காலை முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. வானிலை ஆய்வு மையமும், சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது என்றும், விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்தது. இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டிவருகிறது.
வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, தரமணி, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணியில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டத்தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகளிடையே மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் மீண்டும் பெரு வெள்ளத்தை சந்திக்க வேண்டுமோ என்று மக்கள் பீதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டிவருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம், கடலூரில் 9 செ.மீ., புதுச்சேரியில் 8 செ.மீ., செய்யாறு மற்றும் காரைக்காலில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சேத்தியாதோப்பு 6 செ.மீ, தரங்கம்பாடி, பரங்கிபேட்டை, மரக்காணம் 5 செ. மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ள மழை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

கடந்த சில நாட்களாக சென்னனயில் பெய்த கடும் மழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால்  சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது.

இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நேற்று முற்பகல் சற்று மழை ஓய்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன்.

இந்நிலையில் மீண்டும் நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.

இதனால்  இடம்பெயர்ந்த மக்களும் உயரமான கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களும் அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.
உணவு, குடிநீர், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூக வலைத்தளங்கள்  பெரும் பங்காற்றி வருகின்றன.
இதில் ஏராளமான தனிநபர்கள், அமைப்புக்கள், கட்சிகள் எனப் பலரும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர்.

Leave a Reply