சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து! பயணிகள் அவதி- இலங்கைக்கான விமான சேவை ரத்து

சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து! பயணிகள் அவதி- இலங்கைக்கான விமான சேவை ரத்து

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக நிற்காமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பு, சிங்கப்பூர், அபுதாபி, டெல்லி, மதுரை உள்பட பல பகுதிகளில் இருந்து வந்த 15 விமானங்கள் உடனடியாக தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன.
பின்னர் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரத்திற்கு பின் அந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தரை இறங்கின.
இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மதுரை, திருச்சி, ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 15–க்கும் மேற்பட்ட விமானங்கள் 1 மணியில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளனார்கள்.
மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார்.
மேலும் சென்னைக்கு வந்து சேரும் 20க்கும் மேற்ப்பட்ட விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பி விடப்படுகின்றன.
புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் லண்டன் மற்றும் ஜெர்மனியிலிருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரானவுடன பயணிகள் அனைவரும் சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! மூடப்பட்டது சென்னை விமான நிலையம்!
கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை  மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து தேங்கியமையே விமானம் நிலையம் மூடியமைக்கான காரணம் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னையை வந்தடையும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்ற போதிலும் விடாது பெய்யும் அடை மழையினால் சென்னை விமான நிலையம் திறக்க வாய்ப்பில்லை என அறியமுடிகின்றது..
விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஆரம்பித்த அடைமழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து இலங்கைக்கான விமான சேவை ரத்து
தென்னிந்தியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை மற்றும் வௌ்ளப் பெருக்கினால் சென்னையிலிருந்து இலங்கைக்கான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அவ்வகையில் UL121, UL127, UL123 மற்றும் UL125 ஆகிய விமானப் பயணங்களே ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் சென்னையிலுள்ள பயணிகளின் வசதி கருதி தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அனைத்தும் தயாரான நிலையிலேய இருப்பதாகவும் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பயணிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களுக்காக எயர்லைன்ஸ் சேவை அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். சிறிலங்கன் எயர்லைன்ஸ் சேவையின் பயணிகள் இது தொடர்பில் மேலும் விபரங்களை அறிய என்ற +94 19733 1979 எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன.
விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply