சென்னை வெள்ளத்தில் மிதந்த 35 சடலங்கள் மீட்பு |
சென்னையில் வராலாறு காணாத மழையால் சிக்கி தவிக்கின்றனர் மக்கள். |
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை, வெள்ளத்தால் சென்னை நகரமே தீவுகளாகி துண்டாகிப் போனது. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்புகிறது சென்னை. அதேநேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் மொத்தம் 35 சடலங்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வெள்ளம் வடியவடிய இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும். |
GIPHY App Key not set. Please check settings