சென்னை: சசிகலா விரைவில் ஜெயிலில் இருந்து வெளியாக இருக்கிறார்.. இதனால், அதிமுக – பாஜக – அமமுக என 3 தரப்பிலுமே சசிகலாவின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவிடம் இன்னும் சுமூக முடிவை எட்டப்படாத நிலைமையில் பாஜக உள்ளது.. அதனை பணிய வைக்கவும், தங்கள் கோரிக்கைகளை ஏற்கவும் எத்தனையோ அதிரடிகளை அதிமுகவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுவதாக சொல்லப்பட்டும் வருகிறது. இன்று
நடக்கும் கூட்டத்தில் இதற்கெல்லாம் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது… அல்லது இன்று ஆலோசிக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்த வாரம் சென்னை வரும் ஜேபி நட்டாவிடம் பேசலாம் என்றும் கணிக்கப்படுகிறது. எடப்பாடியார் எனினும் பாஜக தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.. அதேசமயம் எடப்பாடியாரை மனசார முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாத பட்சத்தில், சசிகலாவை வைத்து அடுத்தடுத்த மூவ்களை கொண்டு போகலாம் என்றும் கணக்கு போட்டு வருகிறது. இரட்டை இலை முடக்கம், அமமுக, அதிமுக இணைப்பு போன்றவைகளையும் எடப்பாடியாருக்கு எதிராக செயல்படுத்த போவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.. அதனால் சசிகலாவின் வருகைக்காக பாஜக வெயிட்டிங்! பாதிப்பு இதனிடையே, சசிகலா வருகை குறித்து எப்போது முதல்வரிடம் கேட்டாலும், அவரால் அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இருக்காது, அவரது வருகை அதிமுகவுக்கு எந்தவித மாற்றத்தையும் தராது என்று அடிக்கடி
செய்தியாளர்களிடம் சொல்லி வருகிறார். முதல்வர் இப்படி சொல்லிவிடுகிறாரே தவிர, உள்ளுக்குள் அதிமுக தலைமைக்கு ஏதோ ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருப்பது போல இருக்கிறதாம். சசிகலா 27-ம் தேதி சசிகலா வெளியே வர உள்ளார்.. அதனால், எப்படியும் அதிருப்தியில் உள்ளவர்கள் சசிகலா பக்கம் தாவலாம் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.. அதனால்தான், இவர்களை தீவிரமாக கண்காணிக்க ரகசியமாக உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. அதன்படியே அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மட்டுமின்றி, மாவட்ட செயலர்கள், மண்டல பொறுப்பாளர்களின் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை, மாநில அரசின் உளவுத்துறை போலீசார் கண்காணித்தும் வருவதாக சொல்லப்படுகிறது. தொடர்பு அதேபோல, யாரெல்லாம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன், அன்றைய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், யாரெல்லாம் அவரால் பயனடைந்தவர்கள் என்ற லிஸ்ட்டும் எடுக்கப்பட்டு, அவர்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதற்கெல்லாம் காரணம் 32 எம்எல்ஏக்கள் எப்படியும் சசிகலா பக்கம் தாவக் கூடும் என்று முதல்வரின் பார்வைக்கு தகவல் சென்றதாம்