சென்னை: தயாரிப்பாளர் லிப்ரா ரவிந்தரை இரண்டாவதாக திருமணம் செய்த சின்னத்திரை நடிகையும் பிரபல விஜேவுமான மகாலட்சுமி சொகுசு ரெசார்ட்டில் தனது ஹனிமூனை கொண்டாடி வருகிறார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ரவிந்தர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரையே திருமணம் செய்துள்ளார்.
ஷாக்கான ரசிகர்கள் விஜே மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் மற்றும் பிக்பாஸ் விமர்சகர் ரவிந்தருக்கும் திருமணம் நடந்த தகவலை அறிந்ததும் ஏகப்பட்ட 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். வாழ்த்துக்களை விட இரண்டாவது திருமணம் செய்த மகாலட்சுமி பணத்துக்கு ஆசைப்பட்டே தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்டார் என கேவலமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
2 ஆண்டுகள் காதல் திடீரென ஒன்றும் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் பணத்துக்காக இந்த திருமணம் நடக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக ரவிந்தரும் நானும் காதலித்து வந்த நிலையில் தான் தற்போது திருமணம் செய்து கொண்டோம். பெண்கள் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாதா? என சமீபத்தில் அளித்த பேட்டியில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்களது காதல் கதையை சொல்லி ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
மகாபலிபுரத்தில் ஹனிமூன் திருப்பதியில் திருமணம் ஆன நிலையில், ஹனிமூனுக்கு வெளிநாடுகளுக்கு எல்லாம் செல்லாமல் சென்னை மகாபலிபுரத்திலேயே தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் மகாலட்சுமி ஹனிமூன் கொண்டாடி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் InterContinental Chennai Mahabalipuram Resort என செக்கின் செய்துள்ளார் மகாலட்சுமி. மேலும், அங்கே எடுத்த போட்டோவை பதிவிட்டு ‘Life is beautiful and u made it happen my Purusha ரவிந்தர் சந்திரசேகரன் என க்யூட்டான கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
காதலுக்கு தேவை இதுதான் இந்நிலையில், தற்போது அதே ரெசார்ட்டில் எடுத்த இன்னொரு போட்டோவை ஷேர் செய்த நடிகை மகாலட்சுமி “Love doesn’t need to be perfect It just needs to be true..” என பதிவிட்டு காதலுக்கு பர்ஃபெக்ஷன் தேவையில்லை உண்மை தான் தேவை என தனது காதல் குறித்தும் பதிவிட்டு இருக்கிறார் மகாலட்சுமி.
தனி போட்டோ ஏன் திருமணத்திற்கு பிறகு ரவிந்தர் உடன் இருக்கும் ஜாலியான செல்ஃபி போட்டோக்களை போடாமல், ஏன் நீங்க மட்டும் தனியா இருக்கும் போட்டோக்களை போடுறீங்க என இந்த போஸ்ட்டுக்கும் கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மகாலட்சுமியின் ரசிகர்கள் பணத்திற்காகத்தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு சொல்றவனுங்க தான் முதல்ல அவனுங்க கல்யாணத்துக்கு வரதட்சணை கேட்பானுங்க என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.