வாஷிங்டன்: “வன்முறைய தூண்டியதற்காக” முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் கணக்கை தொடர்ந்து முடக்குவதா அல்லது முடக்கத்தை நீக்குவதா குறித்து தங்களது நிநுவனத்தின் தனித்துவமான மேற்பார்வை நிபுணர்களிடம் கருத்து கேட்டு வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. டிரம்பின் வன்முறையை தூண்டும் க்ருத்துக்களால் தூண்டப்பட்ட அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனின் கேபிட்டலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினார்கள் என்று புகார் எழுந்தது. இதையடுத்து டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனிடையே டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடர்ந்து முடக்கலாமா அல்லது விடுவிக்கலாமா பேஸ்புக்கின் உச்சநீதிமன்றம் என்று அழைக்கப்படும் அதன் சுயாதீன மேற்பார்வைக் குழுவிடம் கருத்துக்கேட்டு வருகிறது. அவர்கள் வழங்கும் தீர்ப்புகளை அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட கடைபிடித்தாக வேண்டும். இதனிடையே உலகளாவிய விவகாரங்களின் பேஸ்புக் துணைத் தலைவர் நிக் கிளெக் டிரம்பின் கணக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசுகையில் “எங்கள் முடிவு அவசியமானது மற்றும் சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார். 0 ட்ரம்பிற்கு எதிராக இதுவரை எடுக்கப்படாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் துணை பிரதமர் கிளெக் வலியுறுத்தி உள்ளார். தற்போதைய நிலையில் உலகின் மிகப்பெரி ய சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்பிக்கில் நீக்கப்பட்டுவது அல்லது அனுமதிக்கப்படுவது தொடர்பான முறையீடுகள் குறித்து இறுதி முடிவுகளை எடுக்கும் பணியை பேஸ்புக்கின் மேற்பார்வைக் குழு மேற்கெண்டு வருகிறது. கடந்த ஆண்டின் பிற்பாதியில் அமெரிக்கத் தேர்தலை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த குழு தொடங்கப்பட்டது. இந்த குழு தான் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு தடை தொடர வேண்டுமா அல்லது முடக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளது.

கிதார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார் – சினிமா எக்ஸ்பிரஸ்
ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்த பிரபல இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் வியாழக்கிழமை காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அவர் இசைத்த சில பிரபலமான பாடல்கள், Nenjukul Peidhidum