டெல்லி வந்தது அப்துல்கலாம் உடல்: மோடி நேரில் அஞ்சலி (வீடியோ இணைப்பு)

டெல்லி வந்தது அப்துல்கலாம் உடல்: மோடி நேரில் அஞ்சலி (வீடியோ இணைப்பு)

கவுகாத்தியில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு:
ஐஏஎப் விமானத்தில் கொண்டு வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகள் பெற்றுக் கொண்டனர்.
பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக கலாம் உடல் வைக்கப்பட உள்ளது.
அப்துல் கலாமின் உறவினர்களும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

முதலாம் இணைப்பு:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று மதியம் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஷில்லாங்கில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் இருந்து அவரது உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இன்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் தெரிவித்துள்ளார்.
ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கலாமின் உடல் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது.
அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படும் கலாமின் உடலை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.
இன்று மதியம் 3 மணி முதல் பொதுமக்கள் அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் அனைத்தும் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டவர் அப்துல்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply