தடுப்பூசி வந்த உற்சாகம்… கொரோனா உருவ பொம்மையை எரித்து கொண்டாடிய பாஜகவினர்!

தடுப்பூசி வந்த உற்சாகம்… கொரோனா உருவ பொம்மையை எரித்து கொண்டாடிய பாஜகவினர்!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர்கள் பலர் தடுப்பூசி வந்த உற்சாக மிகுதியில் கொரோனா வைரஸின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து கொண்டாடினர்.

கொரோனா தடுப்பூசி சீக்கிரம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடியை அவர்கள் பாராட்டினார்கள்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 285 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்திற்கு 9.63 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 20,000 டோஸ் கோவாக்சின் கிடைத்துள்ளன. கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துள்ளது நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல இடங்களில் மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கட்கோபர் பகுதியில் பாஜக தொண்டர்கள் பலர் தடுப்பூசி வந்த உற்சாக மிகுதியில் கொரோனா வைரஸின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து கொண்டாடினர். கொரோனா தடுப்பூசி சீக்கிரம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடியை அவர்கள் பாராட்டினார்கள்.

Leave a Reply