சென்னை: தமிழகத்தில் இன்று 761 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,304 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 882 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 18 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 761 பேருக்கு கொரோனா.. மாவட்ட நிலவரம் என்ன தெரியுமா?
- Post author:tamilmother
- Post published:January 9, 2021
- Post category:இந்தியா
- Post comments:0 Comments
GIPHY App Key not set. Please check settings