தெளிவு

போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர்

மாணவர்கள் நாங்கள் சிறுவர்கள் போக போக விட்டுவிடுவோம் என்றார்கள்

ஆசிரியர் பள்ளி தோட்டத்துக்கு மாணவர்களை அழைத்து சென்றார்
தோட்டத்தில் இருந்த புற்களை பிடுங்க சொன்னார் சில நிமிடத்தில் செய்து முடித்தனர்
பின்பு அங்கிருந்த செடிகளை களைய சொன்னார் இதுவும் சில நிமிடத்தில் முடிந்தது
பிறகு வேலி அருகே இருந்த மரங்களை பிடுங்க சொன்னதும் மாணவர்கள் திரு திருவென முழித்தார்கள் .
ஆசிரியர் சொன்னார் தீய வழக்கங்களும் இப்படித்தான் புற்கள் செடிகள் போன்று சிறிதாக இருக்கும் போதே அழித்து விடுங்கள் வளர்ந்து மரமாகி விட்டால் அது நம்மை அழித்துவிடும் ..