நடிகர் சங்கத் தேர்தல் – விஷால் வெற்றி

நடிகர் சங்கத் தேர்தல் – விஷால் வெற்றி

q
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியின் நாசர், விஷால், கார்த்தி வெற்றி பெற்றுள்ளனர்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.  ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்
இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி
நாசர்: 1344
சரத்குமார்: 1231
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி
விஷால்: 1445
ராதாரவி:1138
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்
கார்த்தி – 1493
எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் -1080
நாசர் வெற்றிக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
விஷால் அணியின் வெற்றியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று ராதாரவி தேர்தல் முடிவு  குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

Leave a Reply