நடிகர் விஜய் மகன் வெளிநாட்டில் என்ன செய்கிறார்ன்னு தெரியுமா? இதோ வைரல் புகைப்படம்,
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார்.
திரையுலகில் இயக்குனராக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவரது நடிப்பில் அடுத்ததாக ‘பீஸ்ட்’ படம் வெளியாக இருக்கிறது. தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து முடித்திருக்கிறார். கடந்த ஆண்டு, “ஜங்ஷன் ” என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.
புத்தாண்டு முன்னிட்டு சஞ்சய் நடித்துள்ள இந்தக் குறும்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் மகனை வைத்து படம் இயக்க பலர் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனராவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு வருகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.