பலம் தரும் சூப்பர் பழங்கள் இதோ!

இன்றைய காலகட்டத்தில் முறுக்கு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளினால் பழங்களின் மகத்துவங்கள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் ஊட்டச்சத்தை அள்ளி தருவது பழங்கள் மட்டுமே. அவ்வாறு நமக்கு பலம் தரும் சில பழங்களை பற்றி இப்போது அறிந்து கொள்வோம்

மாம்பழம்

மாம்பழம் விநியோகம் செய்யப்படும் காலம் குறைவு என்றாலும் அதை வாங்குவதில் மக்கள் அதிகம் கவனம் காட்டுவர்.
இந்த மாம்பழத்தில் மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கந்தகம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்து இருக்கின்றன.
அதனால் இது மலச்சிக்கலைப் போக்கும் மற்றும் கண்களுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். இதில் மெக்னீஷியம் ஓரளவிற்கு நிறைந்திருப்பதால் இதயம் குறித்த பிரச்சனைகள் ஏதும் வரமால் அரோக்கியத்துடன் இருக்கலாம்.
தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் சாப்பிடலாம். உடலில் எடையை அதிகரிக்கும் ஆனால் கொழுப்பை ஏற்படுத்தாது.

கிர்ணிப்பழம்

கிர்ணிப்பழத்தில் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் – சி ஓரளவும் பொட்டாஷியம், சோடியம் அதிகளவிலும் உள்ளது.
இதை சாப்பிடுவது வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. மேலும் இது சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்ச்சியையும் சக்தியையும் கொடுக்கும்.

மாதுளை

மாதுளையில் வைட்டமின் – சி, ஆக்சாலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம், மெக்னீஷியம், கந்தகம் ஓரளவும், மாவுச் சத்து, நார்ச் சத்து, நீர்ச் சத்து ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கின்றன.
இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இதயநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம்.
இதை சாப்பிடுவதால் நாக்கு வறண்டு போகாமல் இருப்பதுடன், நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

திராட்சை

திராட்சையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சர்க்கரை ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
இதில் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும். மேலும் திராட்சையைக் கொட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச் சத்து உடம்பில் சேரும்.

Leave a Reply