பாலிவுட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்தி என்றால் அது நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷல் திருமணம் பற்றி தான். இந்நிலையில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் பிரம்மாண்டமாக நேற்று டிசம்பர் 9 ஆம் தேதி அன்று ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள பார்வாராவில் உள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் உற்சாகத்துடன் நடந்தது. இதனால் டின்ஸல் நகரமே பரபரப்புடன் இருந்தது.
நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்தின் போது மகாராணி போன்று தோற்றத்தை தரும் அட்டகாசமான உடையை அணிந்திருந்தார். நடிகர் விக்கி கௌஷலும் மகாராஜா போன்ற உடையை அணிந்திருந்தார். இவ்விருவரது திருமணத்தை பார்க்கும் போது ஒரு அரச குடும்ப திருமணத்தைப் போன்று காணப்பட்டது. அந்த அளவில் கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக வானவேடிக்கையுடன் நடைபெற்றது.
கீழே கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்தின் போது அணிந்திருந்த உடைகளைப் பற்றியும், திருமணத்தின் போது எடுத்த சில போட்டோக்களும் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
கத்ரீனாவின் திருமண உடை கத்ரீனா கைஃப் ஒரு உன்னதமான டிசைனர் சப்யசாச்சியின் கையால் நெய்யப்பட்ட மட்கா சில்க்கிலான சிவப்பு நிற பிரைடல் லெஹெங்காவை அணிந்திருந்தார். இந்த லெஹெங்காவில் உள்ள வெல்வெட்டில் நுணுக்கமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ரிவைவல் ஜர்தோசி பார்டர்கள் உள்ளன. இது இந்த லெஹெங்காவை பிரமிக்க வைக்கும் வகையில் அழகாக காட்டியது. மேலும் கத்ரீனா இந்த லெஹெங்காவிற்கு மேல் போட்டிருந்த மின்னும் வகையிலான முக்காடு அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
ஆபரணங்கள் கத்ரீனா தனது திருமண லெஹெங்காவிற்கு கையில் கனமான கலீராக்களை அணிந்திருந்ததோடு, கழுத்தில் சப்யசாச்சி ஹெரிடேஜ் ஜூவல்லரியில் இருந்து 22k தங்கத்தில் வெட்டப்படாத வைரங்கள் மற்றும் முத்துக்களைக் கொண்ட பெரிய நெக்லேஸ் அணிந்திருந்தார். இவரது நகைகளில் சோக்கர், நாத், ஜும்கா, வளையல்கள் மற்றும் ஹாத்பூல் ஆகியவை அடங்கும்.
கத்ரீனாவின் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் கத்ரீனா இந்த உடைக்கு மேவ்-பிங்க் லிப் ஷேட் மற்றும் பிங்க் டோன்களுடன் லேசாக மேக்கப் செய்திருந்தார். மேலும் இந்த லெஹெங்காவிற்கு இவர் கொண்டை போட்டு தனது திருமண தோற்றத்தை நிறைவு செய்தார்.
கத்ரீனாவின் சூடாக்கள் கத்ரீனா அணிந்திருந்த சூடாக்களானது இந்தியாவின் மிகவும் பிரபலமான சூடா வடிவமைப்பாளர் ராகுல் லுத்ரா வடிவமைத்ததாகும். இந்த டிசைனர் கத்ரீனாவிற்கு கிளாசிக் ப்ளைன் சிவப்பு சூடாக்களை வழங்கியுள்ளார்.
மாலை மாற்றுதல் இது கத்ரீனா மற்றும் விக்கி கௌஷலின் திருமணத்தின் போது தம்பதிகள் மாலை மாற்றும் போது எடுத்த போட்டோ.
சுற்றி வருதல் இது திருமணம் முடிந்து தம்பதியர்களாக கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் சுற்றி வரும் போது எடுத்த போட்டோ.
வான வேடிக்கை இது சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்தின் போதான வான வேடிக்கை போட்டோ. இதைப் பார்க்கும் போது எவ்வளவு பிரம்மாண்டமான திருமணம் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும்.
ரொமான்டிக் போஸ் இது திருமணத்திற்கு பின் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் சேர்ந்து ரொமான்டிக்காக கொடுத்த போஸ்.