பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தொடர்ந்து புதிய வகை Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் Omicron அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி மக்களுக்கு செலுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று பலருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இது குறித்து பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கூறியதாவது, கொரோனோவுக்கு எதிரான பூஸ்டர் டோஸுக்கு கோவாக்சின் பாதுகாப்பானது.