You are currently viewing பெண்களே! இந்த வழிகள் மூலம் நீங்க உங்களின் ‘அந்த’ ஆசைகளை உங்க கணவனிடம் கூறலாமாம்… அது என்ன தெரியுமா?

பெண்களே! இந்த வழிகள் மூலம் நீங்க உங்களின் ‘அந்த’ ஆசைகளை உங்க கணவனிடம் கூறலாமாம்… அது என்ன தெரியுமா?

தாம்பத்திய வாழ்க்கை ஆண், பெண் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக தொடங்குவது. தம்பதிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாலியல் விருப்பங்கள் இருக்கும். பொதுவாக பல தம்பதிகளுக்குள் திருப்தியான பாலியல் வாழ்க்கை அமைவதில்லை. இது உறவில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். தம்பதிகள் இருவரும் தங்கள் துணையின் பாலியல் விருப்பங்கள் மற்றும் ஆசைகளை தெரிந்துகொள்வது அவசியம். அப்போது, தான் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியும். இது இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், பெண்கள் படுக்கையில் விரும்புவதைத் தொடர்புகொள்வதில் பெரும்பாலும் சங்கடமாக உணர்கிறார்கள்.

Ladies! Through these ways you can tell your husband6
தன் கணவன் அல்லது காதலனிடம் எப்படிச் சொல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, அந்தச் சிக்கலை எதிர்கொள்ள உதவும் சில நுட்பமான வழிகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம். மேலும் நீங்கள் விரும்புவதையும், படுக்கையில் சில விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

Ladies! Through these ways you can tell your husband6

நினைவுகளைப் பற்றி பேசுங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களின் பாலியல் கற்பனைகளைப் பற்றி பேசுவது சற்று சங்கடமாக இருக்கும். ஆனால், உங்கள் கணவனுடன் செய்த சில கவர்ச்சியான விஷயங்கள் போன்ற நினைவுகளை நீங்கள் குறிப்பிடும்போது,​​உங்கள் துணையுடன் நீங்கள் உணர்ந்தது அல்லது சொன்னது, அது ஒரு உரையாடல் தொடக்கமாக மாறும். நீங்கள் அவ்வளவாக சுத்தி வளைத்து பேச வேண்டிய அவசியமுமில்லை. ஆதலால், நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் கணவனிடம் கூறலாம்.

Ladies! Through these ways you can tell your husband6நேர்மறையாக இருங்கள் படுக்கையில் எதிர்மறையாக இருக்க வேண்டாம். நேர்மறைகளில் கவனம் செலுத்துங்கள். தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக, என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்று நீங்கள் விரும்புவதைப் பற்றி கூறுங்கள். உங்களுக்கும் இன்பம் வேண்டுமெனில், ஏன் ஒரு பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக்கூடாது? தம்பதிகள் இருவரும் சேர்ந்து, உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள். அவர் ஏதாவது சரியாகச் செய்யும்போது பாராட்டுகளை தெரிவியுங்கள். விமர்சனம் செய்வது தம்பதிகள் இருவருக்கும் உதவாது.

Ladies! Through these ways you can tell your husband6

கற்பனைகளை ஊக்குவிக்கவும் வாழ்க்கையில் எதைப் பற்றி பேசும்போதும் அது இருவழிப் பாதை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சிறந்த உடலுறவு கொள்ள, அதிகம் தொடர்புகொள்ள வேண்டியது நீங்கள் மட்டுமல்ல வரும்தான். உங்கள் கணவரும் அவருக்கு என்ன வேண்டும் என்று உங்களிடம் தெரிவிக்க வேண்டும். உங்கள் கணவர் என்ன செய்ய விரும்புகிறார், அவர் என்ன விரும்புகிறார், அவருடைய கற்பனைகள் போன்றவற்றைச் சொல்ல அவரை ஊக்குவிக்க வேண்டியது உங்கள் கடமை.

சத்தம் போடுங்கள் உடலுறவு கொள்ளும்போது, அம்மாவை மட்டும் கூறிக்கொண்டிருக்காதீர்கள். உறுமல்கள் மற்றும் பெருமூச்சுகள் போன்ற சத்தங்கள் மூலம் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். எது உங்களை நன்றாக உணரவைக்கிறது மற்றும் அவர் எங்கு சரியாக செல்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் உங்க கணவனுக்கு அந்த சத்தம் தெரிந்துகொள்ள உதவும். மேலும், அவருக்கு ஊக்கமும் தரும். நீங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், முனகுவது சிறந்தது. நீங்கள் இருவரும் இன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதை இது காட்டும். எனவே முயற்சி செய்து பாருங்கள்.

Ladies! Through these ways you can tell your husband6

ஆம் என்று சொல்வது சங்கடமாக உணராமல் தொடர்புகொள்வதற்கான மற்றொரு வழி, ஆர்வத்தின் தருணங்களில் நீங்கள் ஆம் என்று சொல்வது. அவர் ஏதாவது சரியாகச் செய்கிறார் என்றால், ஆம் என்று சொல்லுங்கள். உங்கள் மனதைச் சுதந்திரமாக வைத்து செய்யுங்கள். இது உங்கள் இருவரையும் திருப்தி படுத்த உதவும் வார்த்தை.

Leave a Reply