போயஸில் பன்னீருக்கு நிகழ்ந்த உச்சக்கட்ட அவமானம்! வெளிவரும் பகீர் தகவல்கள்
போயஸ் கார்டனில் மன்னார்குடி கும்பலால் நிகழ்ந்த மிகவும் உச்சகட்ட அவமானத்தால்தான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொந்தளித்து போய் போர்க்கொடி தூக்கியிருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின.
போயஸ் கார்டனுக்கு தாம் வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தாக்கித்தான் கையெழுத்து வாங்கப்பட்டது எனக் கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இதை அதிமுகவின் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் மறுத்து வருகின்றனர்.
ஆனால் அதிமுக வட்டாரங்களோ, போயஸ் தோட்டத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மன்னார்குடி கோஷ்டி வரவழைத்தது.அங்கு முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட வேண்டும் என மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் முதல்வர் ஓபிஎஸ்ஸோ அப்படியெல்லாம் கையெழுத்து போட முடியாது. உங்களுக்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்களிடத்திலும் கடும் எதிர்ப்பு இருக்கிறது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இப்படி பேசியதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த கோஷ்டியின் அதிமுக்கியமான ‘தல’ முதல்வர் ஓபிஎஸ்ஸை திடீரென தாக்கியிருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை முதல்வர் ஓபிஎஸ். இதனால் வேறவழியே இல்லாமல் கையெழுத்துப் போட்டுவிட்டு, எனக்கு இந்த அரசியலே தேவை இல்லை; சொந்த ஊருக்கே போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் மன்னார்குடி கோஷ்டியோ, அதெப்படி அவ்வளவு ஈசியா விட்டு விடுவோம் எனக் கூறி சில கட்டளைகளை பிறப்பித்திருக்கிறது.
இந்த உச்சகட்ட அவமானத்தால்தான் “பொறுத்தது போதும் பொங்கி எழு” என போர்க்கொடி தூக்கியுள்ளார் என அதிர்ச்சி தகவல்களை அடுக்குகிறது அதிமுக வட்டாரங்கள்.
இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் முதல்வர் ஓபிஎஸ்ஸை ‘தாக்கி’ கையெழுத்தி வாங்கினார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.