மாட்டுக்கறியின் தீமைகள்

மாட்டுக்கறியின் தீமைகள்

அசைவ உணவுகளில் ஒன்றான மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன.
அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது.
மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வருமாம். ஏனெனில் அந்த இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது.
அதனால் தமனிகளில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதோடு, வீரியம் குறைந்து நாள்பட்ட நோயையும் ஏற்படுத்தும்.
அதேசமயம், மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
அரிசி, வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ, அது போலவே அந்த மாட்டுக்கறியையும் அளவோடு உண்ண வேண்டும்.
ஏனெனில் மிருகத்தின் கொழுப்பானது தமனிகளில் தங்கி, இரத்த ஒட்டத்தை தடுக்கும். அதனால் மாரடைப்புகள் கூட ஏற்படும்.
மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென், புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள். ஆகவே அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை உண்டால் உடலில் கார்சினோஜென்னின் அளவு அதிகரிக்கும்.
மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடலானது அதிக எடைகூடும் வாய்ப்பு உள்ளது.

tamil

Leave a Reply