கோவா : ஜாம்ஷெட்பூர் எஃப்சி – ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி கோல் எதுவும் அடிக்காமல் டிராவில் முடிந்தது. இந்த இரண்டு அணிகளும் வெற்றி இன்றி தவித்து வந்தன. இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஒரு அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஜாம்ஷெட்பூர் அணி புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட பரூக் சவுத்ரி, செய்மின்லேன் டுங்கல் ஆக்கியோரை களமிறக்கியது. ஹைதராபாத் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வாய்ப்புகளை பெற்றன. ஆனால், கோல் போஸ்ட்டை தாண்டி பந்து செல்லவில்லை. இரண்டாவது பாதியிலும் இதே நிலை தொடர்ந்தது. இரண்டு அணிகளும் பல வாய்ப்புகளை பெற்றும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கோல் அடிக்காமல் போட்டி டிராவில் முடிந்தது. ஹைதராபாத் அணி தொடர்ந்து மூன்றாவது போட்டியை டிரா செய்துள்ளது. மறுபுறம் ஜாம்ஷெட்பூர் அணி இந்த கோல் இல்லாத டிரா மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் 18 புள்ளிகள் எடுத்து நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை பெற்றால் மட்டுமே நான்காம் இடத்தை தக்க வைக்க முடியும். ஜாம்ஷெட்பூர் அணி 13 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று எட்டாம் இடத்தில் உள்ளது. அந்த அணியால் முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல முடியுமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.