வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து, இணையத்தை கலக்கும் ஆள்
அவர் பங்களாதேஷை பூர்வீகமாக கொண்டவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
தன்னையும், மனைவியையும் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து, தம்மை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாமென கோரியுள்ளார்.
அவர் பேஸ்புக்கில் இட்ட பதிவில்,
கடந்த சில நாட்களில் நான் கவனிக்கிறேன் ..
பலரும் என்னையும் என் மனைவியையும் பேஸ்புக் ஐடியிலிருந்து ஸ்கிரீன் ஷாட் செய்த பல படங்களை வைரல் செய்து மோசமான கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.
என்னை அறியாமல் நீங்கள் என்னை துஷ்பிரயோகம் செய்வது சரியானதா?
டாம் இமாம் யார் என்று பலர் அறிய விரும்புகிறார்கள்? அதை பின்னர் கூறுவேன்.
நான் பங்களாதேஷில் பிறந்த அமெரிக்க குடிமகன்.
எனது முந்தைய மனைவி அமெரிக்காவைச் சேர்ந்தவர், அவர் 10 ஆண்டுகளாக மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 2011 இல் இறந்தார்.
நான் இனி திருமணம் செய்து கொள்ளவில்லை.
எனது மகனையும் மகளையும் ஒற்றை தந்தையாக ஆளாக்கியுள்ளேன்.
அதன் பிறகு நான் பங்களாதேஷில் திருமணம் செய்து கொண்டேன்.
நான் என் மனைவியை நேசிக்கிறேன். அவர் என்னை நேசிக்கிறார். அந்த அன்பிற்கு வேறு அர்த்தம் இல்லை.
உங்கள் குடும்பத்தையும் நான் மதிக்கிறேன் என்பதால் தயவுசெய்து எனது குடும்பத்தை மதிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது பெற்றோர், தற்போதைய மனைவி, முன்னாள் மனைவியின் பிள்ளைகள் என அனைவரது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.