விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு.. யார் யார் எங்கெங்கு.. லிஸ்ட்
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் இனி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, தங்களுக்கு எத்தனை தொகுதிள், எவை எவை போட்டியிடும் தொகுதிகள் என்பதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பலமுறை அழைத்துள்ளது. ஆனால் இதுவரை அதிமுக தரப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதேநேரம் மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. 1 களைகட்டிய அதிமுக விருப்ப மனு தாக்கல்.. சீனியர் அமைச்சர்கள் எங்கு போட்டியிட போகிறார்கள் தெரியுமா?