வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் (Photos)

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் (Photos)

வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்தது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில்

வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் அவளைக் கற்பழித்த கொடூரக் காமுக சகோதரர்கள். வித்தியாவைக் கற்பழிப்பதற்காக அவளது நடவடிக்கைகளை அவதானித்து அவளை திட்டமிட்டுக் கடத்தியுள்ளார்கள் இவர்கள். ஒரு சகோதரன் இதற்காக
வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்தது  தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் அவளைக் கற்பழித்த கொடூரக் காமுக சகோதரர்கள். வித்தியாவைக் கற்பழிப்பதற்காக அவளது நடவடிக்கைகளை அவதானித்து அவளை திட்டமிட்டுக் கடத்தியுள்ளார்கள் இவர்கள். ஒரு சகோதரன் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளான. குறித்த 3 சகோதரர்களை விட இன்னும் சிலர் இந்த கற்பழிப்புக் கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் வலுக்கின்றது.
வித்தியாவின் கால்கள் தனித்தனியான இரு மரங்களில் அகலமாகக் கட்டப்பட்டுள்ளது. அவள் கத்திய போது அவளது உட்காற்சட்டை அவளது வாய்க்குள் திணித்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அவளது கழுத்துப்பட்டியால் அவளது இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டியுள்ளார்கள். இடுப்புக்குக் கீழே இருந்த ரைட்டர் ( உள்ளாடை) ஆடைகளை இல்லாது செய்துவிட்டு அவளது சீருடையை கழுத்துப் பகுதி வரையும் உயர்த்தி வைத்துவிட்டு அவளை உயிருடனேயே வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் அவளை தாங்கள் கற்பழிப்பதை மாறி மாறி வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவி ஜனாதிபதியின் பரிசு பெறுமளவுக்கு கல்வியிலும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வந்ததாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியின் சகோதரி யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் தெரியவருகின்றது. தங்கையைக் காணவில்லை எனத் தேடித் திரிந்த சகோதரன் பாழடைந்த வீட்டின் பின்புறம் தங்கை அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு மயங்கி வீழ்ந்துள்ளான்.
 
 
தங்கச்சியை காணவில்லையென்பது முதல்நாள் மாலைதான் தெரிந்தது. எல்லா இடமும் தேடினோம். கிடைக்கவில்லை. பொலிசாரிடம் முறையிட்டோம். அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். மறுநாள் காலையில் தேடிக்­கொண்டு சென்­ற­போது, அந்த வீட்டு வள­வுக்குள் ஒரு சப்­பாத்தைக் கண்டேன். எனக்கு அழுகை பீறிட்டு வந்­தது. உடனே உள்நுழைந்தேன். அங்கு தங்கச்சி அலங்­கோ­ல­மான நிலையில் சட­ல­மாகக் கண்டேன். கால்கள் கட்­டப்­பட்டு, கைகள் தலையின் பின்னால் பாட­சாலை கழுத்­துப்­பட்­டி­யினால் இறுகக் கட்­டப்­பட்­டி­ருந்­தன. ஆடைகள் கிழித்து அகற்­றப்­பட்­டி­ருந்­தன. இதை பார்த்ததும் அந்த இடத்­தி­லேயே நான் மயக்­க­முற்று வீழ்ந்­து­விட்டேன். அதன்­பின்னர் எனக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யாது. தொடர்ந்து நான் யாழ்ப்­பாணம், போதனா வைத்­தி­ய­சா­லை­யில்தான் கண்விழித்துப் பார்த்தேன்.
இது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரன் கூறியவை. இப்பொழுது அனைவரது வாய்களும் புங்குடுதீவை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால், அங்கு என்ன நடந்ததென்பதை அறிக்கையிட எமது செய்திளார் சென்றபோது, சகோதரன் கூறிய வார்தைகள் அவை.
இன்றைய திகதியில் ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் எல்லாம் அது பற்றியே கொந்தளிக்கின்றன. கனவுகளுடன் வளர்ந்த இந்த இளம்மொட்டை சீரழித்து கொன்றதை எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாதென்பதும், தனை செய்தது நம்மவர்கள் தானென்பதுமே கொந்தளிப்பின் பிரதான காரணங்கள்.
புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த சி.வித்­தியா (வயது 18) என்ற உயர்­தர வகுப்பு மாண­வி கடந்த வியா­ழக்­கி­ழமை கொடூ­ர­மாக காமகர்களால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொல்லப்பட்டிருந்தார். அங்கு என்ன நடந்தது, தற்போதைய நிலவரங்கள் என்ன என்பதை அறிக்கையிட எமது செய்தியாளர் சென்றிருந்தார்.
புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­த­ரத்தில் கல்வி கற்பவர் சி.வித்­தியா (வயது 18). கடந்த புதன்­கி­ழமை காலை 7.30 மணி­ய­ளவில் வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் சென்றவர் வீடு திரும்­ப­வில்லை. மாலை­யா­கியும் அவர் வீடு திரும்­பாத நிலையில், பெற்றோர் பாட­சா­லைக்குச் சென்று விசா­ரித்­துள்­ளனர். ஆனால், மாணவி அன்று பாட­சா­லைக்கு வர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பதற்­ற­ம­டைந்த பெற்றோர் அவரைத் தேடத் தொடங்­கி­யுள்­ளனர். இரவு 10 மணி­வரை தேடியும் மாணவி தொடர்­பாக எவ்­வித தக­வலும் கிடைக்­க­வில்லை. இதனால் மேலும் பதற்­ற­ம­டைந்த பெற்றோர் ஊர்­கா­வற்­றுறை பொலிஸில் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­துள்­ளனர்.
மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிசாரிடம் ஓடிச் சென்ற அந்த குடும்பத்திற்கு முதலாவது அதிர்ச்சி காவல்நிலையத்தில் காத்திருந்தது. அங்கு கடமையிலிரந்த ஒரு அதிகாரி, உங்கட மகள் யாரையாது லவ் பண்ணி ஓடிப்போயிரப்பாள் என பொறுப்பற்ற விதத்தில் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள், மாணவியின் தாயாரின் மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தியது என்பது, மாணவியின் மரணச்சடங்கில் வெளிப்பட்டது. அவர் அந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி அரற்றியபடியிருந்தார்.
பொலிசாரின் பொறுப்பற்ற பதிலுடன், அந்த குடும்பத்திற்கு அன்றிரவு தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது. அடுத்த நாள் வியா­ழக்­கி­ழமை காலையும் ஊர்­மக்­களும் உற­வி­னர்­களும் சேர்ந்து தேடத் தொடங்­கினர். மாணவி வழ­மைபோல் பாட­சாலைக்கு செல்லும் ஆலடி வீதி­யூ­டாக அவர் செல்­ல­வில்லை என்­பது பின்னர் தெரி­ய­வர, அத­னை­ய­டுத்து வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் செல்லும் பாதைகள் அனைத்­திலும் ஊர்­மக்கள் தேடுதல் நடத்­தினர்.
பிர­தான வீதி­யி­லுள்ள ஆலடிச் சந்­தி­யி­லி­ருந்து செல்லும் சிறு­வீ­தி­யொன்றின் (கண்­ணகி அம்மன் கோயில் பகுதி) சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாழ­டைந்த வீட்டின் பின்­பு­ற­மாக உள்ள பற்­றைக்குள் இருந்து மாண­வியின் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. உற­வி­னர்கள், ஊர்­மக்கள் ஒன்­று­தி­ரண்டு சென்று பார்த்­த­போது மாண­வியின் இரு கைகளும் தலைக்கு மேலாகச் சேர்த்து கட்­டப்­பட்ட நிலை­யிலும் கால்கள் அலரி மரச் செடியில் இழுத்து கட்­டப்­பட்ட நிலை­யில் இருந்தது. இதனை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்பது புரிந்தது. இதுவே, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கொதிப்பான நிலையை ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளிக்க தொடங்கினார்கள். உடனடியாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்­பவ இடத்­திற்கு விரைந்த ஊர்­கா­வற்­றுறைப் பொலிஸார், சட­லத்தை மீட்­ட­துடன் விசா­ர­ணை­க­ளையும் நடத்­தினர். மாண­வியின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­ இ­டத்தில் அவ­ரது புத்­த­கப்பை உள்­ளிட்ட பொருட்கள் சித­றுண்டு காணப்­பட்­டன.
சம்­பவ இடத்­திற்கு வந்த நீதிவான் ஆரம்ப விசா­ர­ணை­களின் பின்னர் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்டார். அத­னை­ய­டுத்து சடலம் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.
மாண­வியின் சட­லத்தை அண்­மித்­தி­ருந்த பகு­தியில் பொருட்­களும் அணிந்து சென்­றி­ருந்த ஆடை­களும் பொலி­ஸாரால் சான்றுப் பொருட்­க­ளாக எடுத்துச் செல்­லப்­பட்­டன.
யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை சட்ட வைத்­திய அதி­காரி மாண­வியின் மரணம் தொடர்­பாக தெரி­விக்­கையில்- மாணவி மிக மோச­மாக, ஒன்­றுக்கு மேற்­பட்­டோரின் கூட்டு வன்­பு­ணர்வின் பின் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும், அவ­ரது வாய்க்குள் துணி அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலும் தலையில் அடி­பட்­ட­தனால் மூளையில் ஏற்­பட்ட இரத்தக் கசி­வுமே அவ­ரது இறப்­புக்கு கார­ணம் எனவும் தெரி­வித்­துள்ளார். மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக மாண­வியின் உடற்­பா­கங்கள் கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.
மாணவியின் வீட்டிற்கு சென்ற எமது செய்தியாளரிடம்மாண­வியின் தாயார் பேசும்போது- மகளின் வாயி­லி­ருந்து இரத்தம் வெளி­யே­றி­யி­ருந்­த­தாக பார்த்­த­வர்கள் கூறி­னார்கள். எனது பிள்ளை யாரு­டனும் நெருங்கிப் பழ­க­மாட்டாள். எவ­ரு­டனும் கதைப்­ப­து­மில்லை. மிகவும் அமை­தி­யான சுபாவம் கொண்­டவள். வீட்­டி­லி­ருந்து புறப்பட்டு நேராகப் பாட­சா­லைக்கு சென்று விடுவார். அதே­போன்று பாட­சாலை விட்டு நேராக வீட்­டுக்கு வந்து விடுவார்  என கண்ணீர் மல்க கூறினார்.
இந்த சம்பவத்தின் பாரதூரதன்மையும், உணர்வுபூர்வதன்மையும் கருத்தில் கொண்டு விசேட அணிகள் களமிறக்கப்பட்டதாக, வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அலுவலக அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கூறினார். பொலிசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த சமயத்தில் பொலிசார் ஒரு உத்தியை கையாண்டனர். தாம் குறிவைக்கப்பட்ட விடயத்தை குற்றவாளிகள் உணரமுன்னர் அவர்களை மடக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரு சோடிக்கப்பட்ட கதையை அவிழ்த்து விட்டு, குற்றவாளிகளை திசைதிருப்ப முயன்றனர். தம்முடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர் சிலரை தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர், ஆனால் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற தகவலை கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்களும், நம்ப, உடனடியாக புலம்பெயர்ந்துள்ள ஊடகங்கள் பலவற்றில் இந்த செய்தி மின்ன ஆரம்பித்தது.
இந்த திசைதிருப்பல் பொலிசாருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. ஒரு காமுகனை தெருவில் வைத்து மடக்கி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உரித்தெடுத்ததில், உள்ளதனைத்தையும் கக்கிவிட்டான். தமது கூட்டாளியை பொலிசார் மடக்கியதை எப்படியோ மோப்பம் பிடித்த மற்ற இரண்டு காமுகர்களும் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், இதற்குள் அவர்களை பொலிஸ் உளவாளிகள் கண்காணிப்புவலையமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டனர். அவர்கள எந்த பேரூந்தில் எத்தனை மணிக்கு ஏறினார்கள் என்ற விபரங்கள் விலாவாரியாக கிடைக்க. புங்குடுதீவில் பேரூந்தை வழிமறித்த பொலிசார் அவர்களை மடக்கினார்கள்.
அவர்களையும் உரித்தெடுத்ததில் உள்ளதை ஒப்பக் கொண்டு விட்டனர். ஆனால் ஒருவிடயம் மட்டமே நெருடலாக உள்ளது. குடும்ப முன்பகையை தீர்க்கவே இதனை செய்ததாக காமுகர்கள் கூறியதாக பொலிசார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர். எனினும், இதனை மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்புமே கிடையாதென்றும், எப்படி முன்பகை வரலாமென்றும் கேட்கிறார்கள்.
அதிகளவான தண்டனையிலிருந்து தப்பிக்க காமுகர்கள் விடும் கதையா இதுவென்பதை நன்றாக ஆராய வேண்டும்.
அதேபோல, இரண்டு குடும்பங்களும் உறவுமுறையானவை என்ற பொலிசாரின் கூற்றையும் மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இதுவும் ஆராயப்பட வேண்டியது.
மாண­வியின் சடலம் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னை­களின் பின்னர் வியா­ழக்­கி­ழமை இரவு பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதன் பின்னர் சடலம் புங்­கு­டு­தீ­விற்கு கொண்டு வரப்­பட்டு அவரின் பாட­சா­லையின் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டது. அங்கு பாட­சாலை மாண­வர்கள், அர­சி­யல்­வா­திகள், பொது­மக்கள் எனப் பலரும் தமது அஞ்­ச­லி­களை செலுத்­தினர். அதன் பின்னர் மாண­வியின் உடல் ஊர்­வ­ல­மாக எடுத்­துச்­செல்­லப்­பட்­டது.
இந்த கொலை மாணவர்கள் மத்தியில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் என பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்கள் உரிமை, பெண்களை சகமனிதர்களாக ஏற்கும் பக்குவம் தொடர்பான பரவலான பிரக்ஙையை இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாடசாலைகளின் கடமை. வெறும் போராட்டங்களுடன் நின்றுவிடுவதால் பலனில்லை. மறுநாள் பத்திரிகைகளில் படம் வருவது மாத்திரமே அதன் பிரதிபலனாக இருக்கும்.
இதேவேளை, இப்பொழுதும் மனதை அழுத்தும் கேள்வியொன்றும் உள்ளது. பங்குடுதீவிற்காக முழு தமிழ் மாணவர்களும் கொதித்து போயிருக்க, தீவின் அருகிலுள்ள யாழ்நகரத்து பிரபல பாடசாலைகள் ஒன்றுகூட மூச்சும் விடவில்லை. தெருவில் இறங்கவுமில்லை.
கிரிக்கெட் போட்டிகளிற்கும். கப் கலக்சனிற்கும் மாத்திரம்தான் நீங்கள் தெருவிற்கு வருவீர்களா சகோதரர்களே?
 

 

Leave a Reply