புதுடெல்லி:
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிகளில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சோர்வை போக்கி, அவர்களது மன உறுதியை குறையாமல் பாதுகாப்பதற்காக இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சிங்கு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள போராட்டக்களத்தில் பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்படுகிறது. இதில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் தேசிய, சர்வதேச வீராங்கனைகளும் இணைந்து விளையாடுகின்றனர். இது குறித்து விவசாய அமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான சுக்விந்தர் சிங் கூறுகையில், ‘விவசாயிகளின் போராட்டக்களத்தில் கபடி போட்டி நடத்துவதாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் எங்களிடம் கேட்டுக்கொண்டன.
நாங்களும் தினமும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவதால், இந்தப் போட்டியை நடத்த அனுமதித்துள்ளோம். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.2,100, 2- ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ.1,100- உம் வழங்கப்படும். இதை நன்கொடையாளர்கள் வழங்க முன்வந்துள்ளனர்’ என்று கூறினார்.
GIPHY App Key not set. Please check settings