விவசாயிகள் போராட்டத்தில்… இந்திய அரசு செமையா செயல்படுதுங்க… அப்படியே பல்டியடித்த கனடா பிரதமர்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களையும், அமைச்சக ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர்
மோடியிடம் அவர் உறுதி அளித்தார்
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் கவலை அளிக்கிறது. கனடா விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் போராட்டம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. குவியும் ஆதரவு இதற்க்கிடையே குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த பேரணி திசைமாறியது. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.இதனால் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லியே பதற்றமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு இந்தியாவின் பிரச்சினைகளில் வெளி ஆட்கள் தலையிடக் கூடாது என்று
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில மாதங்களுக்கு முன்பு இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.இந்தியாவில் போராட்டம் நடந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ஜனநாயக நாட்டில் யாருக்கும் போராட உரிமை உண்டு. கனடா அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சகம் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யூ-டர்ன் அடித்த கனடா பிரதமர் இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய அரசை பாராட்டி பேசிய ஜஸ்டின் ட்ரூடோ அப்படியே யூ-டர்ன் அடித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய கனடா பிரதமர் விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு பாராட்டு இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகள் போராட்டத்தில் கலந்து அப்போராட்டத்தை திசைதிருப்பியதாக மத்திய அரசு சுட்டிக்காட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களையும், அமைச்சக ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடியிடம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார். அப்போது விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு கனடா பிரதமர் பாராட்டு தெரிவித்தார் என்றார்.