TamilMother

tamilmother.com_logo

விஸ்வரூப வளர்ச்சி.. உலக அளவில் கலக்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம்.. புதிய மகுடம் சூடுகிறது!

cri pumbs

கோயம்புத்தூர்: திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் ரூ.35 கோடி ( 5 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்துள்ளது, சி.ஆர். ஐ. குழுமம் தனது வர்த்தகத்தை உலகளவில் விரிவுபடுத்தி வருகின்றது. இவ்வளர்ச்சி குறித்து சி.ஆர்.ஐ. குழுமத்தின் துணைத் தலைவர் திரு. G. சௌந்தரராஜன் அவர்கள் கூறியதாவது, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான தயாரிப்புகளை வடிவமைப்பதில், சி.ஆர்.ஐ. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.

 

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் நமக்கே முழுமையாக சொந்தமான கிளை நிறுவனத்தை நிறுவ சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளோம். அமெரிக்காவில் செயல்படும் சில பம்புகளை அசெம்பிளிங் செய்வதோடு நிலத்தடி நீர் பம்புகள், கழிவு நீர் பம்புகள், பிரஷர் பூஸ்டர் பம்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பம்புகள் ஆகியவற்றை விநியோகிக்கும்.

 

மேலும் அவர் கூறியதாவது, “விநியோகிஸ்தர்கள் மூலமாக அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நமது தயாரிப்புகளை அனுப்பி வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தை இந்நாடுகளிலிருந்து எதிர்பார்க்கிறோம். இந்தப் பிராந்தியத்தில், விற்பனைக்கு பின் வழங்கக் கூடிய சேவைகளையும் நாம் டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும், புதிய தயாரிப்புகளை வழங்கவும் உறுதி செய்துள்ளோம். இதனால் அந்தப் பிராந்தியத்தில் நாம் வளர்ச்சியடைய நல்ல வாய்ப்புள்ளது. இந்தப் பகுதியில் நாம் அறிமுகப்படுத்திய தயாரிப்புகள் பின்வருமாறு: சுரங்கத் தேவைகளுக்கான பிரத்தியேக பம்புகள், ரசாயன செயல்முறைக்கான பம்புகள், பம்பின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் IoT (Internet of Things) உடன் கூடிய தொழிற்சாலைக்கான பம்புகள் ஆகியவை ஆகும்.

 

முக்கியமாக லைட்னிங் அரெஸ்ட்டர் பொருத்தப்பட்ட மோட்டார்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக சி.ஆர்.ஐ.யின் ஆராய்ச்சி மையத்தின் மூலம் உருவாக்கப்பட்டது, சி.ஆர்.ஐ. அமெரிக்கா சந்தைகளை குறித்து ஆராய்ச்சி செய்வதிலும், அமெரிக்கா மற்றும் கன்னடா சந்தைகளுக்கான அமெரிக்க சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கான NSF & CSA போன்ற சான்றிதழ்களை பெறுவதிலும் கணிசமான முதலீடு செய்துள்ளது. சி.ஆர்.ஐ. நீர் நிரப்பப்பட்ட ரீவைண்டபிள் சப்மெர்சபிள் மோட்டார்களுக்கு NSF சான்றிதழ் பெற்ற உலகின் முதல் நிறுவனம் ஆகும். சி.ஆர்.ஐ தயாரிப்புகள் 120க்கும் மேலான நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சி.ஆர்.ஐ, குழுமம், ஸ்பெயின், இத்தாலி, பிரேசில், துருக்கி, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தனது மையங்களைக் (முழுவதும் சொந்தமான கிளை நிறுவனங்கள்) கொண்டுள்ளது.

2018-19 நிதியாண்டில் சி.ஆர்.ஐ, குரூப் ரூ. 2100 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. மேலும் இது 2022-23ல் 5000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு வணிகத்தை விட வெளிநாட்டு ஏற்றுமதி வணிகம் அதிக வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

உள்நாட்டைப் பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் பல்வேறு அரசு திட்டங்களுக்கும், டீலர்கள் மூலமாகவும் 13 லட்சம் அதிக ஆற்றல் மிக்க மின் சேமிக்கும் ஸ்டார் மதிப்பீடு பம்புகளை சி.ஆர்.ஐ. பொறுத்தியுள்ளது. இதனால் 12,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை நாட்டிற்காக சேமித்துள்ளது. சமீபத்தில், சி.ஆர்.ஐ யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை IoT வசதிக்கொண்ட PM மோட்டார்களை (Permanent Magnetic Motor) உருவாக்கி, அறிமுகம் செய்துள்ளது. அவை சோலார் பம்பிங் செய்வதற்கு பயன்படுத்தப்படுபவை. கடற்படைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பம்ப் செட்டுகளை சி.ஆர்.ஐ. பெருமையுடன் வழங்கியது. மேலும், பாதுகாப்புத் துறைக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பம்ப் செட்டுகளை சி.ஆர்.ஐ. வடிவமைத்து வருகிறது. நிறுவனத்தைப் பற்றி: உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் திரவ மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் சி.ஆர்.ஐ. முதன்மை வகிக்கிறது. சி.ஆர்.ஐ. பம்புகள், மோட்டார்கள், வால்வுகள், IoT டிரைவ்ஸ் & கண்ட்ரோலர்கள், பைப்புகள், வயர்ஸ் & கேபிள் மற்றும் சோலார் சிஸ்டம்ஸ் ஆகியவற்றையும் அளிக்கிறது.

 

இக்குழுமம் 9000 வகையான பொருட்கள் மற்றும் உலகிலேயே ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய 100 சதவிகித ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்புகளை தயாரிக்கிறது. சி.ஆர்.ஐ.யின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் 120 நாடுகளில், 20,000 விற்பனையகங்கள் மற்றும் 1,500 சேவை மையங்கள் மூலம் விற்கப்படுகிறது. இந்நிறுவனம் 21 தயாரிப்பு மையங்களை உலகெங்கிலும் கொண்டுள்ளது. பிரிட்டன் மற்றும் இத்தாலியில் நிறுவனங்களை கொண்டுள்ளது. இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு – ”ஃப்ளூடைன் அட்வான்சுடு டெக்னாலஜி மையம்” அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்றதாகும். சி.ஆர்.ஐ. இந்தியாவின் முதன்மை ஏற்றுமதியாளராக விளங்குகிறது. EEPC (Engineering Export Promotion Council) விருதை 14 முறையும், மின் சேமிப்புக்கான (NEC) விருதை 4 முறையும் பெற்றுள்ளது. சி.ஆர்.ஐ. ஃப்ளூயிட் சிஸ்டமின் தயாரிப்புகள் கீழ்வரும் பல்வகை துறைகளில் பயன்படுகிறது : கெமிக்கல் & பிரோசஸ், மின்சாரம், நீர் & கழிவுநீர், எண்ணெய் & வாயு, மருந்து, சக்கரை & சுத்திகரிப்பு, பேப்பர் & பல்ப், கடற்படை & பாதுகாப்பு, மெட்டல் & மைனிங், உணவு & பானங்கள், பெட்ரோகெமிக்கல் & ஃபைனரீஸ், சோலார், பில்டிங், HVAC, தீயணைப்பு, விவசாயம் மற்றும் குடியிருப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.

1680017258_photo.jpg

கேரளா மதுபானச் செய்திகள்: இந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மது விற்பனை வருவாய் | திருவனந்தபுரம் செய்திகள்

திருவனந்தபுரம்: நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிம்மதி வருவாய் சேகரிப்பு மாநிலத்தின், கலால் துறை 2022-23 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட திருத்தப்பட்ட வருவாய் வசூல் இலக்கை அடைய உள்ளது, இது இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும்.TOI ஆல் அணுகப்பட்ட தரவுகளின்படி,

மேலும் படிக்க »
viking-therapeutics-obesity-drug-shows-promise-in-early-stage-study-shares-soar.jpg

வைக்கிங் தெரபியூட்டிக்ஸ் உடல் பருமன் மருந்து ஆரம்ப-நிலை ஆய்வில் உறுதிமொழியைக் காட்டுகிறது, பங்குகள் உயர்கின்றன, ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட்

புதுடெல்லி: வைகிங் தெரபியூட்டிக்ஸ் இன்க் செவ்வாயன்று தனது சோதனை உடல் பருமன் மருந்து பாதுகாப்பானது மற்றும் ஆரம்ப கட்ட ஆய்வில் எடையை 6 சதவீதம் வரை குறைக்க உதவியது, சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் அதன்

மேலும் படிக்க »
PTI03_28_2023_000041A.jpg

FY23 இன் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ₹91,000 கோடியை தள்ளுபடி செய்தன

ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ₹91,000 கோடியை தள்ளுபடி செய்துள்ளன. 2222 நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் ₹5 இல் ₹1க்கு மேல் PSB

மேலும் படிக்க »
1680016912_photo.jpg

ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல்-க்கு திரும்பினார் ஆனால் ஒரு வீரராக இல்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் பங்கு குறித்த ஊகங்கள் பரவி வருகின்றன. ஐபிஎல் 2023 திங்களன்று அவர் போட்டிக்கு திரும்புவது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.“நமஸ்தே இந்தியா. உங்களுக்காக

மேலும் படிக்க »
March28-c_d.jpg

பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் கூறியதையடுத்து, மத்திய அரசை கார்கே கடுமையாக சாடியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசை கடுமையாக சாடினார், கட்சியின் முன்னாள் தலைவரை “அச்சுறுத்தும், பயமுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும்” அரசாங்கத்தின் அணுகுமுறையை

மேலும் படிக்க »
374664213_0-15.jpg

PPIகள் மூலம் ₹2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணத்தை NPCI பரிந்துரைக்கிறது

ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐக்கள்)-வாலட்கள் அல்லது கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top