TamilMother

tamilmother.com_logo

வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள் – சென்னை விமான நிலைய காட்சிகள்

வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள் – சென்னை விமான நிலைய காட்சிகள்

சென்னையில் கொட்டிவரும் பெருமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் விமானங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
சென்னை விமான நிலையத்தை அண்டியுள்ள தாம்பரம் பகுதியில், நேற்றுமுன்தினம் காலை தொடக்கம் நேற்றுக்காலை 8 மணி வரையான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையினாலும், ஏரிகள் உடைப்பெடுத்து வந்த நீரினாலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் முற்றாகவே மூடப்பட்டது.
அதேவேளை, இந்த பெரு வெள்ளத்தின் பாதிப்புக்கு விமானங்களும் தப்பிக்கவில்லை.
ஓடுபாதைகளுக்கு அருகேயும், தரிப்பிடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள பெரிய விமானங்கள் வெள்ளத்தின் நடுவே சிக்கிப்போயுள்ளன.
அதேவேளை பல சிறிய விமானங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இன்னும் சில விமானங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, விமான நிலைய சுற்று வேலிப்பகுதிக்கு இழுத்தச் செல்லப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் வரும் 6ஆம் நாள் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவசர நிவாரணப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பயணிகள் போக்குவரத்துக்காக அரக்கோணம் கடற்படை விமான நிலையத்தை தற்காலிக பயணிகள் விமான நிலையமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

image-7.jpg

MSME துறைக்கான கடன் வழங்கல்கள் Q2FY23 இல் 24% வளர்ந்துள்ளன: TransUnion CIBIL-SIDBI அறிக்கை

Q2 (ஜூலை-செப்டம்பர்) FY23 இல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) துறைக்கான கடன் வழங்கல்கள் ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன (yoy), மைக்ரோ பிரிவில் கணிசமான வளர்ச்சியுடன் உள்ளடக்கிய கவனம்

மேலும் படிக்க »
1679570444_photo.jpg

ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்: பாஜக | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: பாஜக வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியது காங்கிரஸ் மைல்கல் படி, எம்.பி., ராகுல் காந்தி, ‘உடனடி தகுதி நீக்கத்தை’ எதிர்கொள்கிறார் உச்ச நீதிமன்றம் ஜூலை 10, 2013 தீர்ப்பு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை

மேலும் படிக்க »
Cold-a_d.jpg

பெண் பிறப்புறுப்பு காசநோய்க்கு சரியான நேரத்தில் தலையீடு தேவை என்று நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர்

பெண் பிறப்புறுப்பு காசநோய் (FGTB) பொதுவாக பெண்களில் காணப்படுகிறது மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் காசநோயால் ஏற்படுகிறது (அரிதாக மைக்கோபாக்டீரியம் போவிஸ் மற்றும்/அல்லது வித்தியாசமான மைக்கோபாக்டீரியா) பொதுவாக நுரையீரல் அல்லது

மேலும் படிக்க »
1679570050_photo.jpg

120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெறுகிறது

Xiaomi வேகமாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது — Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் கடந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி. ஸ்மார்ட்போன் இப்போது அதன் இரண்டாவது விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போனின்

மேலும் படிக்க »
த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்: 90களின் பிற்பகுதியில் பாலிவுட் மெகாஸ்டார் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நெருக்கம் பரவலான கவனத்தைப் பெற்றது. ஹம் தில் தே சுகே சனம் திரைப்படத்தில் அவர்களின்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top