வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்

 

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய் - Cineulagam
சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம் நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். தி.மு.க., சார்பில், வெள்ள நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக அரசிடம் வழங்க முடியாத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே, தமிழக நிதித்துறை செயலர் சண்முகம், நேரம் ஒதுக்கிக் கொடுக்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். அதன் பின், பலரும், தமிழக அரசிடம் நிதி வழங்க, நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரணத்திற்காக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். நடிகர் விஜய், நிவாரண நிதியாக, ஐந்து கோடி ரூபாய் வழங்க காத்திருக்கிறார். தமிழக அரசு தரப்பில், அதிகாரிகள் நேரம் ஒதுக்காததால், அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் சங்கம் சார்பிலும் நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், சிவக்குமார்-சூர்யா-கார்த்தி குடும்பத்தார், விஷால், தனுஷ், சிவகார்த்தி்கேயன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். நிதி எல்லாம் ஒன்றாக திரட்டப்பட்டு நடிகர் சங்கம் சார்பில் முதல்வரிடம் வழங்கப்பட இருக்கிறது.

Leave a Reply