வேகமாக பரவிய செய்தி.. வாட்ஸ் ஆப் முழுக்க ஒரே பரபரப்பு.. பதறியடித்து ஓடி வந்த தமிழக பாஜக.. போச்சு!
சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் பதறியடித்துக் கொண்டு பதில் சொல்லும் அளவிற்கு நேற்று இணையம் முழுக்க வைரலாக ஒரு செய்தி பரவியது. பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பரவிய இந்த செய்தியால் பாஜக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை வெளியான இந்த அறிக்கையில் பல ஷாக் அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. வெளிமாநில ஊழியர்களுக்கு தமிழ்நாட்டில் வீடு, மதமாற்ற தடை சட்டம், மாட்டிறைச்சி தடை சட்டம் என்று பல அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுள்ளது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இருக்கும் சில அறிவிப்புகள் தேர்தல் சமயத்தில் அக்கட்சிக்கே எதிராக திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது. எப்படி இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று பாஜக வெளியிடாத அறிவிப்பு ஒன்று இணையம் முழுக்க வைரலாக பரவி வந்தது. தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேசம் என்று மாற்றுவோம் என்று பாஜக அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. அலஹாபாத்தை பிரயாக்ராஜ் என்று மாற்றியது போல தமிழ்நாட்டின் பெயரையும் மாற்றுவோம் என்று பாஜக தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக இதில் தகவல்கள் இடம்பெற்று இருந்தன. கொசுறு இதோடு ஒரு கூடுதல் தகவலும் வைரலாக பரவியது. தமிழ்நாடு என்ற பெயர் அண்ணா வைத்தது. இதனால்தான் பாஜக அதை மாற்ற போகிறது. சமஸ்கிருத முறையில் தமிழ்நாட்டிற்கு தக்ஷிண பிரதேசம் என்று பெயர் வைப்போம் என்று பாஜக கூறியதாக செய்திகள் பரவின. வாட்ஸ் ஆப் இந்த செய்தி நேற்று வாட்ஸ் ஆப்பில் பெரிய அளவில் வைரலானது. பல வாட்ஸ் ஆப் குரூப்களில் தமிழ்நாட்டின்
பெயரை பாஜக மாற்ற போகிறது என்று அதிரடியாக மெசேஜ்கள் உலா வந்தது. பலரும் இதை உண்மை என்று நம்பி இணையம் முழுக்க ஷேர் செய்தனர். டிவிட்டர், பேஸ்புக்கிலும் கூட இதே செய்தி வைரலாக பரவியது.